"எய்ம்ஸ் கட்டுமானம்.." மன்சுக் மாண்டவியா சொன்ன பதிலால்.. கொந்தளித்த திமுக எம்பிகள்! கடும் அமளி

எய்ம்ஸ் விவகாரம் குறித்து மத்திய அமைச்சருக்கும் திமுக எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்பிக்களுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. அன்றைய தினமே நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் எப்படி இருந்தது.. வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன. மறுநாள் பிப்.1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

மோடி 2.o அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதாலும் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு புதிய வரி முறையில் உள்ளவர்களுக்கு உயர்த்தப்பட்டது. இது தவிர மேலும் பல முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அவையை முடக்கினர்.

விவாதம்

விவாதம்


சில நாட்கள் அவை முற்றிலும் முடங்கிய நிலையில், இப்போது தான் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசினர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக்சபாவிலும் நேற்று ராஜ்ய சபாவிலும் பதிலளித்தார். குறிப்பாக ராஜ்யசபாவில் அவர் பேசும் போது திமுக எம்பிக்களை பார்த்து, உங்கள் அரசைக் கலைத்ததே காங்கிரஸ் தான்.. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்றும் கேட்டார்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் வழக்கம் போலக் கூடியது. அப்போது மக்களவையில் தமிழக எம்பிகள், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.. குறிப்பாக, மருத்துவ கட்டமைப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர். டிஆர் பாலு பேசுகையில், "நாட்டில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் போதிய உட்கட்டமைப்புகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை இன்னும் ஏன் தொடங்காமல் உள்ளீர்கள்" என்று கேள்வி எழுப்பினர்.

 மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

அப்போது குறுக்கிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் பொய்யான தகவல்களை அளிக்கிறார்கள்.. தேவையில்லாமல் இதை அரசியல் ஆக்குகின்றனர்.. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியவில்லை என்றாலும் கூட வகுப்புகள் தொடங்கி நடைபெற்றே வருகிறது" என்றார்.

அமளி

அமளி

மேலும், நமது நாட்டில் எந்தவொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் போதிய உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழ்நாடு எம்பிக்கள் பொய்யான கருத்துகளைக் கூறுவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதற்கும் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கத்தைக் கண்டித்தும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+