"யார் அந்த சூப்பர் சிஎம்.." தர்மேந்திர பிரதான் சொன்னதும் திமுக எம்பிக்கள் ஆவேசம்! உடனே போராட்டம்
டெல்லி: புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இப்போது பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை விவகாரம் குறித்துப் பேசும்போது கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போது திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் புதிய கல்வி கொள்கை விவகாரத்தை திமுக எம்பிக்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.

இன்று புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்பிக்கள் முதலில் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழி எம்பி சொல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களைத் தமிழக அரசு தவறாக வழிநடத்துகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணைய விருப்பம் தெரிவித்தது, கடைசியில் யூடர்ன் அடித்துவிட்டது...கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது .. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டுவிட்டு சூப்பர் முதல்வரின் ஆலோசனையில் பின்வாங்கியது" என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றம் சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், அப்போதும் திமுக எம்பிக்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications