டெல்லி வரை எதிரொலித்த உதயநிதி கைது.. திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் – முழக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யாதே கைது செய்யாதே என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேபோல் லோக்சபாவிலும் திமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

dmk-mps-arrest-in-parliament-prmises-after-protest-against-udhanidhi-arrest-in-chennai

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தவறியதாக கூறி நேற்று திமுக சார்பில் தஞ்சாவூரில் ஆளும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

இந்த சமயத்தில் திமுக தொண்டர்கள் திரிஷா திரிஷா என்று கத்தினர். அதை கேட்ட உதயநிதி ஸ்டாலின், ''எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ.. அங்கே தண்ணீர் வர வேண்டும்.. நான் காவிரியை கூறினேன்'' என்று இரட்டை அர்த்தத்தில் கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது.

இதுதொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்று சென்னை நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில் தான் உதயநிதியின் கைது நடவடிக்கை டெல்லி வரை எதிரொலித்தது.

டெல்லியில் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்று வருகின்றனர். உதயநிதி கைதான தகவல் அறிந்தவுடன் திமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு கைது செய்யாதே கைது செய்யாதே என்று கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதன்பிறகு லோக்சபாவிற்குள் திமுக எம்பிக்கள் சென்றனர். அங்கும் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து நாடாளுமன்ற லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+