"இப்போது இல்லை.. நேரம் வரும்போது அண்ணாமலை சிறைக்குச் செல்வார்!" ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு
டெல்லி: முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்க்க நான்கு நாள் அரசு முறையணமாக ஐக்கிய அமீரகம் சென்று இருந்தார். இந்தப் பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, "முதலமைச்சரின் துபாய் பயணம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது; இதை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய்களை கூறி வருகிறார். இங்கிருந்து பணத்தை எடுத்துச் சென்று இருந்தால், அது மத்திய அரசுக்கு தெரிந்து இருக்காதா? முதல்வரை வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் அதிகாரம் கூட மத்திய அரசுக்கு உள்ளது.

அரசியல் பக்குவம் இல்லை
முதல்வரும், அவருடன் சென்றவர்களும் பணத்தை முதலீடு செய்ய சென்று இருந்தால் அதை மத்திய அரசு தடுத்து இருக்காதா? யாரை ஏமாற்ற பார்க்கிறார் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று நினைத்து பேசி கொண்டு இருக்கிறார். அளவோடு பேசனும், அளவோடு இருக்கணும். அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் இல்லை. இன்னும் கூட ஒரு போலீஸ் அதிகாரி போலவே இருக்கிறார்.

அதிருப்தி
இதுவரை தமிழக பாஜக தலைவர்களாக இருந்தவர்களுக்கு பதவி கிடைதத்தைத போல தனக்கும் கிடைக்கும் என அண்ணாமலை நினைக்கிறார் போல! ஆனால் அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுகளாலேயே அவருக்கு பதவி கிடைக்காமல் போகிவிடவும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசில் உள்ள பாஜக தலைவர்கள் அண்ணாமலை செயல்பாடுகள் மீது அதிருப்தியில் உள்ளதாக எனக்கு தகவல் கிடைக்கிறது.

நேரடி பதில் இல்லை
அவர் பொறுப்பு இல்லாமல் பேசி வருவதாகவும் மத்திய அம்மாநில அரசுக்கு இடையே உள்ள உறவை கெடுக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருவதாக மத்திய பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, அவர் விரைவில் மாற்றப்படலாம் என்றும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் அரசியல் முதிர்வு இல்லாமல் பேசி வருகிறார். கேட்கும் கேள்விக்கு பதில் கூறாமல் சம்மந்தமே இல்லாமல் அண்ணாமைல பேசி வருகிறார்.

தமிழக அரசியல்
திமுகவை பொறுத்தவரை அண்ணா கூறியதை போல ஆக்கப்பூர்வமாக குற்றச்சாட்டுகளை எடுத்து கொள்வோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். முதல்வர் ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் அண்ணாமலை இப்படி பேசி வருகிறார். தமிழ்நாட்டில் இப்போது திமுக vs அதிமுக இடையே தான் அரசியல் நடைபெறுகிறது. அதை திமுக vs பாஜக என்று மாற்ற முயல்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் அது நடக்காது.

அதிமுக எங்களுக்கு பங்காளி
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அதிமுக எங்களுக்கு பங்காளி தான். இவர்கள் எங்களுக்கு பகையாளி. ஆகையால் இவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது. விமர்சனங்களை யார் வேண்டும் என்றால் பண்ணலாம். பொறுப்புள்ள தலைவர்கள் சொல்லும் விமர்சங்களை ஏற்றுக்கொள்வோம். அண்ணாமலை சும்மா ஜெயிலுக்கு போக வேண்டும், ஜெயிலுக்கு போக வேண்டும் என்று கூறி வருகிறார்.

கைது நடவடிக்கை
அவதூறு வழக்கில் எப்போதாவது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா போலீசாக இருந்துள்ள அவருக்கு இதுகூடவா தெரியாது. ஐபிசி500இல் எப்போதாவது கைது செய்யப்பட்டுள்ளனரா? முதல்வரின் பயணத்தில் அரசு முறையாக யாரெல்லாம் சென்றுள்ளனர் என்ற பட்டியல் உள்ளது. அதைத்தாண்டி டிஆர்பி ராஜா, எம்எம் அப்துல்லா ஆகியோர் சுய ஆர்வத்தின் பேரில் சென்றனர். அண்ணா சிங்கப்பூர் சென்ற போதும், கூட பலர் இங்கிருந்து சென்று பார்த்தனர். அதேபோல தான் பலரும் துபாய் சென்றனர்.

நேரம் வரும்போது சிறை செல்வார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை. ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை, நேரம் வரும்போது அவர் சிறைக்கு செல்வார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைக்க தமிழகத்தில் இருந்து கோடி கோடியாக பணம் கர்நாடக பாஜகவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்











Click it and Unblock the Notifications