வெற்றி துரைசாமி விழுந்த சட்லஜ் நதியில் இருந்த ஆபத்து என்ன தெரியுமா? உறைய வைக்கும் உண்மைகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மூழ்கிய சட்லஜ் ஆறு எப்படிப்பட்டது தெரியுமா? அதில் உள்ள டேஞ்சர் விஷயங்கள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளருடன் புதிய திரைப்படம் எடுப்பதற்காக லொகேஷன் பார்க்க சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டு காஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி மாலை வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

Do you know How dangerous Sutlej river is ?

அப்போது ஓட்டுநர் டென்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கார் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று நீரில் மூழ்கியிருந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சினின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து வெற்றியின் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் படுகாயங்களுடன் பாறைகளில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சிம்லா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. சைதை துரைசாமியின் மகனை சட்லஜ் ஆற்றுக்குள் தேடி வந்தனர்.

அவரது உடல் கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெற்றியின் உடைகள், உடமைகள், சூட்கேஸ், ஐஃபோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றியின் நிலை தெரியவில்லை. பாறை இடுக்குகளில் இருந்த மனித மூளை வெற்றியினுடையதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.

ஏனெனில் டென்சினுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து மனித மூளை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒப்பிட சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரிகளும் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் வெற்றியை போன்று எடை, உயரம் கொண்ட ஒரு பொம்மையை செய்து அதை நீரோட்டத்தில் போலீஸார் விட்டனர்.

பிறகு அது எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தனர். அவ்வாறு செய்த போது அது ஒரு இடத்தில் மூழ்க சென்றது. உடனே அந்த இடத்தில் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் இறங்கி தேடினர். அப்போது ஒரு கை தெரிந்தது. அங்கு சென்று ஒரு வீரர் பார்த்த போது பாறையின் இடுக்கில் வெற்றியின் உடல் சிக்கியிருந்தது.

உடனே அந்த வீரர், வெற்றியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸார் அந்த சடலத்தை பார்த்து வெற்றியினுடைய சடலம் என உறுதிப்படுத்தினர். பிறகு அந்த சடலம் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு வெற்றியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வெற்றி விழுந்த சட்லஜ் ஆறு எத்தகையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமான நதி சட்லஜ் ஆகும். கயிலை மலைக்கு அருகில் உள்ள ஏரியில் இந்த ஆறு உற்பத்தியாகிறது. இமயமலையில் இருந்து இந்த ஆறு உற்பத்தி ஆவதால் இங்கு எப்போதுமே நீரோட்டம் அதிகமாகவே இருக்கும்.

அத்துடன் எப்போதும் குளிர் அதிகமாக இருக்கும். வெற்றியை தேட ஆற்றில் இறங்கிய நீச்சல் வீரர்கள் மாலை 4 மணிக்கு மேல் தேட இயலாது என சொல்லிவிட்டார்களாம். ஏனென்றால் அந்த ஆற்றில் இறங்கினால் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் இருக்குமாம். இதனால் நீச்சல் தெரிந்தாலும் இந்த ஆற்றில் சாதாரணமாக இறங்கி விட முடியாது.

பயிற்சி பெற்றால் மட்டுமே இந்த ஆற்றில் இறங்க முடியும் என்கிறார்கள். மேலும் நீர்வீழ்ச்சிகளும் அதிகமாக இருப்பதால் எப்போதும் நீரோட்டம் இருக்கும். இங்கு விழுந்தவர்களில் பலரது சடலங்கள் கிடைத்ததில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+