கை விரல் நகங்கள் இந்த வடிவில் இருந்தால் ரிஸ்க் உங்களுக்கு எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி!
டெல்லி: உங்கள் நகத்தின் வடிவத்தை பார்த்தே நீங்கள் யார் எப்பேர்பட்டவர் என்பதை படாரென சொல்லி விடுகிறோம்.
ஒரு மனிதன் யார் என்பதை அவன் குணம் காட்டிக் கொடுக்கும். ஒரு வேளை அந்த நபர் நடிக்கிறாரா என்பதை கண்கள் காட்டி கொடுக்கும். ஆளை பார்த்தாலே அவர் எப்படி என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

பொதுவாக ஜாதகத்தை பார்த்தும், கைகளை பார்த்தும் ஒருவரின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. பிறக்கும் போதே தலைவிதி எழுதிவைத்தாகிவிட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது.
தற்போது கால் நகங்கள், கால் விரல்கள், முக அமைப்பு, கைவிரல்கள், நகங்கள், உட்காரும் ஸ்டைல் உள்ளிட்டவைகளை வைத்து ஒருவரது பர்சனாலிட்டி தெரிந்து விடும். அந்த நகங்களை வைத்து யார் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அதாவது நகங்களில் 4 வகைகள் உள்ளன. அவை Long Nail, Wide Nail, Round Nail, Square Nail ஆகியவை உள்ளன.
நகங்களின் அமைப்புக்கும் ஆளுமைக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. இதை வைத்து உங்கள் பலம் என்ன, உங்கள் பலவீனம் என்ன, சுபாவம், நடத்தை, உங்கள் எண்ணம் ஆகியவற்றை அறியலாம். நீங்கள் முடிவு எடுப்பதில் வல்லவர்களா, நீங்கள் கற்பனை திறன் மிக்கவரா, புதிது புதிதாக யோசிக்கத் தெரிந்தவரா, எந்த நெருக்கடி வந்தாலும் அமைதி காப்பீர்களா, உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளலாம்.
முதலில் நீளமான நகம்- இப்படிப்பட்ட வடிவில் நகம் இருந்தால் நீங்கள் கிரியேட்டிவ்வாக யோசிப்பீர்கள், கற்பனை திறனும் அதிகம், நுணுக்கங்களை கற்று தேர்ந்தவர், தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். நீங்கள் அமைதியானவர், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர். உங்களது இடது மூளையை காட்டிலும் வலது மூளை அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளது. யாருமே எதிர்பார்க்காத தீர்வை கொடுப்பீர்கள். எல்லாருடனும் பழகும் குணம் கொண்டவர், உங்கள் பொறுமைக் காக்கவும் முடியும் பொறுமையை இழக்கவும் முடியும். உங்கள் இலக்கை அடைய 100 சதவீதம் உழைப்பீர்கள்.
அது போல் அகலமான நகம்- இந்த நகத்திற்கு சொந்தக்காரர்கள் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசுவார்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசமாட்டார்கள். நம்பகத்தன்மைமிக்கவர்கள், பொறுப்பை உணர்வீர்கள். உங்கள் மனதில் பட்டதை பேச எப்போதும் தயங்க மாட்டீர்கள். புதிய ஐடியாக்களை கேட்க விரும்புவீர்கள். எப்போதும் ஆக்கப்பூர்வமானவராக இருப்பீர்கள். உங்கள் உணர்வுகளை காட்டுவதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். அது போல் அடுத்தவர் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிவீர்கள். நிறைய பேர் உங்களை நம்புவார்கள்.
வட்ட வடிவ நகம்- நீங்கள் சட்டென கோபப்படமாட்டீர்கள். எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். அனைவரையும் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் ரொமாண்டிக், அதே நேரம் சென்டிமென்ட் அதிகம். அன்பை பல விதங்களில் வெளிப்படுத்தி அடுத்தவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். கைகள் அழுக்காகும் என்பதை பற்றி கவலைப்படாமல் சட்டைக் கையை மடித்துக் கொண்டு வேலை பார்ப்பீர்கள். புதிய சூழல்களை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள்.
சதுர வடிவ நகம்: நீங்கள் சுயமாக சிந்திப்பீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என அடுத்தவர்கள் சொன்னால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். உங்களுக்கு எது சரினு தோன்றுகிறதோ அதைத்தான் செய்வீர்கள். ரிஸ்க் எடுப்பதை விரும்பீர்கள். சாகசங்களை செய்ய துணிவீர்கள், புதிய இடங்களை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். வாழ்க்கையில் உயரவும் லட்சியத்தை அடையவும் கடுமையாக உழைப்பீர்கள். அடுத்தவர்கள் கேட்க விரும்பாவிட்டாலும் நீங்கள் நினைப்பதை சொல்வீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications