டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடலுறவு செய்யாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஆஹா.. சிங்கிள்ஸுக்கு குட்நியூஸ் சொன்ன ஆய்வாளர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதிலும் சில நன்மைகள் இருக்கிறது.

இந்த உலகில் உயிர்கள் தோன்றியதிலிருந்து உடலுறவு என்பது உயிர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மிகச் சரியாக சொல்வதெனில் மற்ற எல்லா நடவடிக்கைகளை விட அடுத்த சந்ததியினரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்குதான் உயிர்கள் அதீத முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அப்படி இருக்கையில் மனிதர்கள் மட்டுமே ஆண்டின் பெரும்பாலான நாட்களில் உடலுறவு கொள்ள தயாராக இருக்கும் உயிரினமாகும். ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தினால் சிலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

 வேலை நேரத்தில் உடலுறவு..! த்ரிலுக்காக செய்யும் பெண்கள்.. ஆண்கள் இதில் ரொம்பவே மோசம்! புதிய ஆய்வு வேலை நேரத்தில் உடலுறவு..! த்ரிலுக்காக செய்யும் பெண்கள்.. ஆண்கள் இதில் ரொம்பவே மோசம்! புதிய ஆய்வு

கர்ப்பம்

கர்ப்பம்

உடலுறவில் ஈடுபடும்போது உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது, கணிசமான அளவு கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன என எவ்வளவோ நன்மைகள் சொல்லப்பட்டாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருப்பதிலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, முதல் நன்மை கர்ப்பமடையாமல் இருப்பது. இன்றைய நவீன உலகில் புதிய புதிய கருத்தடை சாதனங்கள் வந்துவிட்டாலும் கூட அவை 100% பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. ஆகவே உடலுறவு கொள்ளாமல் இருப்பதுதான் கர்ப்பமடையாமல் இருப்பதற்கான ஒரே வழி.

நோய் தாக்குதல்

நோய் தாக்குதல்

அதேபோல உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நோய்களில் பால்வினை நோய்களும் ஒன்று. சுகாதாரமற்ற வழியில் உடலுறவு கொள்வதால் இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது ஏகப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, இந்த நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. எனவே இந்நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் உடலுறவை தவிர்க்கலாம். அதேபோல சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுக்கான அபாயத்தையும் இது குறைக்கும்.

 கற்பனை திறன்

கற்பனை திறன்

மற்றொருபுறம் நீங்கள் யாருடனாவது தொடர்ந்து உறவில் இருக்கிறீர்கள் எனில் உங்களுடைய பாலியல் ஆசைகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே சிறிது காலம் தனிமையில் கழித்தால் அப்போது பாலியல் குறித்த உங்களுடைய கற்பனை திறன் அதிகமாக வளரும். எனவே மீண்டும் உறவில் ஈடுபடும் முன்னர் இது குறித்து உங்கள் இணையுடன் கலந்து பேசி அதற்கேற்ப நீங்களும் அவரும் தயாராகலாம். இது பாலியல் வாழ்க்கையை மேலும் நீடிக்கச் செய்யும். ஆனால் தனிமையில் இருக்கும் இக்காலகட்டங்களில் ஆபாச படங்கள் பார்த்தால் உங்கள் கற்பனை திறன் வளர செய்யாது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விரைவான முன்னேற்றம்

விரைவான முன்னேற்றம்

அதேபோல நீங்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்தால் விரைவாக குணமடைந்துவிடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகிச்சையில் இருக்கும்போது உங்கள் மனதையும் உடலையும் வருத்தி எந்த வேலையும் செய்யக்கூடாது. அப்போதுதான் உடல் சீக்கிரம் குணமடையும். ஆனால் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் எனில் அங்கு கவன குவிப்பு அவசியமாகும். எனவே சிகிச்சையில் இருக்கும்போது உடலுறவை தவிர்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட காலத்திற்கு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு தங்களது துணையுடன் மனம்விட்டு பேசும்போது இன்னும் அதிகமான புரிதல் உண்டாகும். ஒரு வேளை உங்களுடைய தேர்வு தவறாக இருந்தாலும் அக்காலகட்டத்தில் இது தெரிந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைத்து மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வேலை செய்யும் இடம், நோய் பாதிப்பு என புற மற்றும் அக சூழலுக்கு ஏற்ப இந்த தகவல்கள் பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். எனவே இது குறித்த விளக்கங்களுக்கு அருகில் உள்ள மருத்துவர்களை அணுகவும்.

English summary
No matter how many benefits are said like the body and mind are rejuvenated while engaging in sex, a significant amount of fat is burned, there are some benefits of not having sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X