கை வச்சா காலி! தொட்டாலே வெடிக்கும் பம்பார்டியர் வண்டு! 100 டிகிரி கொதிக்கும் ஸ்ப்ரேவால் ஆபத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பதை போல் பம்பார்டியர் வண்டை பார்த்தாலே வேட்டைக்காரர்கள் கூட தலைத்தெறித்து ஓடும் அளவுக்கு ஆபத்தானதாம். பேரிலேயே பாமை வைத்திருக்கும் இந்த வண்டு, தனது உடலிலும் வெடிகுண்டை வைத்திருக்கிறதாம். அந்த பூச்சியினுள் மறைந்திருக்கும் அதிர்ச்சிகளை பார்க்கலாம்.

இந்த வண்டு உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. பெரும்பாலான விலங்குகள் இந்த வண்டின் ஆபத்தை அறிந்து அதன் கிட்டயே நெருங்காது. இந்த வண்டானது பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். அரை இன்ச் முதல் 1 இன்ச் வரைதான் வளரும்.

bombardier beetle

பெரும்பாலான இனங்களின் தலை மற்றும் உடல் பகுதி சிகப்பு அல்லது ஆரஞ்ச் நிறத்திலும் இறக்கை கருப்பு அல்லது அடர் நீலத்திலும் காட்சியளிக்கும். இந்த வண்டு இனங்கள் அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

வயிற்றில் 2 அறைகள்

இவை புல்வெளிகளில் ஈரப்பதமான இடங்களில் மட்டுமே காணப்படும். பார்ப்பதற்குத்தான் தனி பூச்சி போல் இருக்கும். இந்த பூச்சியின் சிறப்பம்சமே, இதன் பயங்கர ஆயுதம்தான். அதாவது இந்த வண்டின் வயிற்றுக்குள் 2 தனித்தனி அறைகள் காணப்படுகின்றன.

2 வேதிப்பொருள்கள் இருக்கும்

முதல் அறையில் ஹைட்ரோகுவினோன் மற்றும் ஹைட்ரஜன் பெராசைக்டு என்ற 2 வேதிப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த வேதிப் பொருள் தனித்தனியாக இருக்கும் வரை ஆபத்தே இல்லை. 2ஆவது அறையில் கேட்டலைஸ், பெராக்ஸிடேஸ் என்ற நொதிகள் இருக்கும்.

வண்டின் எதிரிகள் எறும்பு, சிலந்தி, தவளை தன்னை தாக்க வரும் போது தன் உடலின் வால்வை திறந்துவிடும். அப்போது முதல் அறையில் இருக்கும் இரு ரசாயனங்களும் 2ஆவது அறைக்கு செல்லும். அப்போது அதன் உடல் வெப்பமானது 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கும் அளவுக்கு உயரும்.

அழுத்தம் ஏற்பட்டு வெடிக்கும்

இந்த அதிக வெப்பத்தால் ஒரு வித அழுத்தம் உண்டாகி அதன் வயிற்றில் இருந்து பெரும் சப்தத்துடன் வெடித்துக் கொண்டு பென்சோகுயினோன் என்ற வேதிப்பொருள் வெளியே வருகிறது. இது தன்னை தாக்க வரும் உயிரினத்தின் கண்ணையும் மூச்சுக்குழலையும் சிதறடித்துவிடும். ஒரு வினாடிக்கு 500 முறை தொடர்ந்து அந்த வேதிப்பொருளை வெளியேற்றும்.

270 டிகிரி

இது தனது உடலை 270 டிகிரிக்கு சுழற்றி எந்த திசையில் இருந்து எதிரிகள் வந்தாலும் குறி வைத்து தாக்கும். இது அசந்த நேரம் பார்த்து தவளை விழுங்கினாலும் கூட வயிற்றுக்குள் வெடிக்கும். அப்போது தவளையானது உடனே வாந்தி எடுத்து அந்த பூச்சியை வெளியே தள்ளிவிடும். மனித உடலில் அந்த நச்சு பட்டால் தீக்காயம் போல் கொப்பளம் ஏற்படும்.

பம்பார்டியர் வண்டின் நச்சுப்பொருள் மற்ற பூச்சிகளை விட 5 மடங்கு வேகமாக தாக்கும். இந்த பூச்சியிலிருந்து இத்தனை நச்சுவாய்ந்த திரவம் வெளியேறும் போது அந்த வண்டு மட்டும் எப்படி வெடிக்காமல் இருக்கிறது என்ற ஆச்சரியம் ஆய்வாளர்கள் உண்டு.

எப்படி வெடிக்கவில்லை

இதுகுறித்து எம்ஐடி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கூறியிருப்பதாவது: இந்த வண்டின் உடலில் செம்பர், சிட்டின் என்ற கடினமான பொருள் இருப்பதால்தான் வெடிப்பை வண்டு தாங்குகிறது. இதனால் அதன் உடல் சூடாகாமலும் இருக்கிறது. உடலுக்குள்ளேயே வெடிகுண்டை வைத்திருக்கும் இந்த வண்டு குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை கமென்ட்டில் சொல்லுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+