ராகுல் காந்தி அணியும் பர்பெர்ரி டீசர்ட்டுகளில் இத்தனை அம்சங்களா? இருந்தாலும் நம்ம கதர் கதர்தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்து கொள்வதாக பாஜக கூறும் பர்பெர்ரி டீசர்ட் எந்த நாட்டை சேர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் மூன்றாவது நாள் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நடைபயணத்தில் ராகுல், வெள்ளை நிறத்தில் அணிந்திருந்த டீசர்ட் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. பர்பெர்ரி நிறுவனத்தின் டீசர்ட்டைதான் ராகுல் அணிந்திருந்தார். அதன் விலைதான் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல்காந்தியின் படத்துடன் டீசர்ட்டின் புகைப்படத்தையும் அதன் விலையை வெளியிட்ட பாஜக, பாரத் தேகோ என்ற தலைப்புடன் ட்வீட் செய்திருந்தது. தேசமே நன்றாக பாருங்கள் என்பதுதான் அதன் அர்த்தம். எளிமை குறித்து பேசும் ராகுல் ரூ 41 ஆயிரத்திற்கு டீசர்ட் அணிந்து வந்துள்ளார் என பாஜக விமர்சித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. என்ன ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட கூட்டததை கண்டு பயமா என கேள்வி எழுப்பியதுடன், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் குறித்த பிரச்சினையை பேசுங்கள். ஆடை குறித்து கூற வேண்டும் என்றால், பிரதமர் மோடி அணிந்துள்ள 10 லட்சம் விலையுள்ள கோட்டை பற்றி பேச வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்கள்.

பர்பெர்ரி

பர்பெர்ரி

இந்த நிலையில் பர்பெர்ரி டீசர்ட் என்ற பெயரை பார்த்ததும் கூகுளில் நிறைய பேர் அந்த பிராண்டை தேடி வருகிறார்கள். அதுகுறித்து பார்ப்போம். பர்பெர்ரி என்ற நிறுவனத்தை தாமஸ் பர்பெர்ரி என்பவர் இங்கிலாந்தில் தொடங்கினார். இந்த நிறுவனத்தை தொடங்கிய போது தாமஸுக்கு 21 வயது இருந்தது.

பிரிட்டன் நிறுவனம்

பிரிட்டன் நிறுவனம்

இது முழுக்க முழுக்க பிரிட்டன் நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் லண்டனில் உள்ளது. இங்கு டீசர்ட்கள், பேண்ட், சர்ட், காலணி, லெதர் பொருட்கள், வாசனை திரவியங்கள் விற்கப்படுகின்றன. பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளும் விற்கப்படுகின்றன. உலகின் முதல் வாட்டர் ப்ரூப் உடைகள் என்றால் அது இவை தான்.

3 டி டெக்னாலஜி

3 டி டெக்னாலஜி

இந்த ஆடைகள் ரப்பருக்கு மாற்றாக இலகுவாக இருக்கும் விதத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த பிராண்ட் டீ சர்ட்கள் ரூ 500 முதல் ரூ 1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆடைகள் 100 சதவீதம் பருத்தியால் நெய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உடைகள் மிக அதிக தரமானது, மிகவும் கிளாசிக்காக பிரிட்டிஷ் ஸ்டைலில் காணப்படும். பாரம்பரியம் மாறாமல் புதுமைகளை புகுத்தி இந்த உடைகள் தயாரிக்கப்படுகிறது. இதில் 3டி டெக்னாலஜி புகுத்தப்படுகிறது. 3டி டெக்னாலஜியில் தயாராகும் ஆடைகளுக்கு குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும். அந்த துணிகள் மறுசுழற்சி செய்யப்படும். அவ்வளவு எளிதில் டீசர்ட் மங்கலாகிவிட்டது, வெளுத்து போய்விட்டது என தூக்கி எறிவது குறைந்துவிடும். என்னதான் வெளிநாட்டு பிராண்டுகள் இருந்தாலும் நம் நாட்டு பருத்தி, கதர் ஆடைகளுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+