3 சொகுசு கார்கள்.. 2 கோடி அசையா சொத்து.. வினேஷ் போகத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 12ம் தேதியான நேற்று தொடங்கியது. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. அவருக்கு 64 லட்சம் மதிப்பில் சொந்தமாக 3 கார்கள் இருக்கிறது. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒலிம்பிக் மல்யுத்தத்தின் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (29) இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு முன் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.வினேஷ் போகத் எப்படியும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகம் இருந்ததாக கூறி தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

haryana assembly election 2024 vinesh phogat congress 2024

இதனிடையே தகுதி இழப்பால் மனம் உடைந்த வினேஷ் போகத் இனி போராட எனக்கு தெம்பு இலை என்று கூறி, மல்யுத்தத்திலிருந்து விலகுவதாகத் தனது ஓய்வை அறிவித்தார். இதனிடையே அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இந்தியா திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக வினேஷ் போகத்தும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியதுடன், பின்னர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு ஹரியானாவின் ஜுலானா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 12ம் தேதி (நேற்று) தொடங்கிய நிலையில், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் வினேஷ் போகத்.

அதில் தனது சொத்து விவரங்களை வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ளார்., தன்னிடம் வால்வோ எக்ஸ் சி60 (ரூ. 35 லட்சம்), ஹூண்டாய் க்ரெட்டா (ரூ. 12 லட்சம்), டொயோட்டா இன்னோவா (ரூ. 17 லட்சம்) என 60 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் இருப்பதாக கூறியுள்ளார். இதில் டொயோட்டா கார் வாங்கியதில் ரூ. 13 லட்சம் கடன் இருப்பதாக கார் கடன் குறித்தும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள . ரூ. 2 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ள வினேஷ் போகத், தன் கணவர் பெயரில் ரூ. 19 லட்சம் மதிப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 2023-24-ம் ஆண்டில் தனது வருமானம் ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் வருமான வரி கட்டியுள்ளார். தனது வங்கி இருப்பாக ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+