Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்க பதக்கத்தின் மதிப்பு இத்தனை லட்சமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களின் விலை என்ன என்பது தெரியுமா? அது போல் இந்தியா இதுவரை இந்த ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கங்களை வென்றது என்பது பற்றி தெரியுமா?

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி முதல் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 5 வெண்கலப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப்பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

paris olympic 2024 sports gold 2024

இன்று இரவு நடக்கும் வழக்கில் வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தால் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கங்களாக கிடைத்திருக்கும். இந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளம், ஜூடோ, வில்வித்தை, ஹாக்கி, டென்னிஸ், படகு போட்டி, கோல்ஃப் என 16 விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்றது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியை நடத்த அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை ரூ 61,500 கோடியை செலவிட்டுள்ளனர். இதில் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ 75 லட்சமாகும்.

அது போல் வெள்ளிப் பதக்கத்தின் விலை ரூ 50 லட்சமாகும். வெண்கல பதக்கத்தின் விலை ரூ 30 லட்சம். இந்த ஒலிம்பிக் தொடருக்காக 5084 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பதக்கங்கள் எல்லாவற்றையும் பாரிஸில் உள்ள சவுமெட் என்ற நகை நிறுவனம் வடிவமைத்தது. பதக்கத்தின் பின்புறத்தில் கிரேக்க தெய்வமான நைக் இடம் பெற்றுள்ளார்.

இந்த பதக்கத்தின் எடை தோராயமாக 450 கிராம் முதல் 550 கிராம் வரை இருக்கும். அது போல் 3.3. அங்குலம் விட்டமும் 0.36 அங்குலம் தடிமனும் கொண்டது. இந்த தங்கப் பதக்கத்தில் 95.4 சதவீதம் வெள்ளி மற்றும் மீதமுள்ள சதவீதம் சுத்தமான தங்கத்தால் உருவாக்கப்பட்டது.

வெள்ளி பதக்கங்களில் வெள்ளியும் 18 கிராம் இரும்பும் இருக்கும். அது போல் வெண்கல பதக்கத்தில் 415 கிராம் பித்தளை, 21.85 கிராம் ஜின்க், 18 கிராம் இரும்பு இருக்கும். பொதுவாக இரும்புகள் ஒலிம்பிக் பதக்கத்தில் பயன்படுத்தப்படாது, ஆனால் தற்போது பயன்படுத்துவது சாதாரண இரும்பு இல்லை, இது ஈபிள் டவரில் இருந்து வந்தது.

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 122 பதக்கங்களை பெற்றுள்ளது. அவற்றில் 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம். அது போல் சீனா மொத்தம் 90 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் ஆகும். கிரேட் பிரிட்டன் 3ஆவது இடத்தையும் ஆஸ்திரேலியா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றது.

நேற்றைய தினம் கூட அமெரிக்கா 11 பதக்கங்களை வென்றது. அவற்றில் 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆகும். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக பதக்கங்களை குவித்து இரண்டாவது மிகப் பெரிய நாடாக அமெரிக்கா விளங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+