இந்த 5 விஷயங்களை google-ல் தேடினாலே 5 ஆண்டு சிறை தண்டனைதான்! உஷாரய்யா உஷாரு!
டெல்லி: கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது சட்டவிரோதமானது, மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே இனி தேடும் போது இந்த வார்த்தைகளை போடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் நிறைய விஷயங்களை தேடுகிறோம். இதன் மூலம் ஒரு கணினி வழியாக உலகில் நடக்கும் எல்லா விஷயங்களையும் நாம் ஓரிடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இதில் உலகில் உள்ள எந்த கோடியையும் நாம் அறிந்து கொள்ளலாம். சமையல், விளையாட்டு, அறிவு, பாடல், படம் உள்ளிட்டவைகளை காணலாம். கூகுள் மேப் மூலம் இன்று தெரியாத பகுதிக்கும் நாம் சரியாக போய் சென்றுவிடுகிறோம்.
அந்த அளவுக்கு கூகுள் உதவுகிறது. அதே கூகுளில் சில கெட்ட விஷயங்களும் உள்ளன. அதாவது திருடுவது எப்படி, தற்கொலை செய்வது எப்படி, கொலை செய்வது எப்படி போன்ற விஷயங்களை தேடி தெரிந்து கொள்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் ஆபாச படங்களையும் தேடி எடுத்து பார்க்கும் நிலை தற்போது உள்ளது. அப்படி விளையாட்டாக தேடும் விஷயமே நமக்கு வினையாக முடிகிறது. அதிலும் சிறைக்கு செல்லும் அளவுக்கு இருக்கிறது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
போதை பொருள் தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை கூகுளில் தேடுவது தண்டனைக்குரிய குற்றம். அது போல் கூகுளில் ஆபாச படங்கள் பார்ப்பது, குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது பெரும் குற்றமாகும்.
இது போன்று குழந்தைகளின் ஆபாச படத்தை பார்ப்பது, தயாரிப்பது வைத்திருப்பது கூட தவறுதான். இதையும் மீறி யாராவது செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். யார் பார்க்கிறார்களோ அவர்களின் ஐபி அட்ரஸை வைத்து அந்த நபரை கண்டுபிடித்து விடுகிறார்கள்.
அது போல் வெடிகுண்டு தயாரிக்கும் முறை குறித்து தேடினாலும் குற்றம்தான். அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் இது போன்ற சமூகவிரோத தேடல்களை கண்காணிக்கிறது. அவர்களிடம் சிக்கினால் சிறை நிச்சயம்.
மருத்துவரின் அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வதும் தவறுதான். எனவே யாரும் இந்த விஷயம் குறித்தும் தேட வேண்டாம். அது போல் பாலியல் வன்கொடுமைக்குள்ளானவரின் பெயர் , முகவரி, போட்டோ உள்ளிட்டவைகளை பொது வெளியில் போடக் கூடாது. அது போல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குறித்த விவரங்களையும் போடக் கூடாது. இதுபோல் போட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications