உதவியாளர் பிழைத்துக் கொள்ள! வெற்றி மாயமானது ஏன்? சைதை துரைசாமி மகன் செய்த மிகப் பெரிய தவறு என்ன?
டெல்லி: ஒரே காரில் பயணம் செய்த கோபிநாத் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மட்டும் காணாமல் போனது ஏன்?
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது திரில்லர் படத்திற்காக லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அவருடன் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்தும் சென்றிருந்தார்.

அங்கு இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பிறகு வாடகைக்கு காரை அமர்த்திக் கொண்டு அதில் இருவரும் லொகேஷன் பார்க்கச் சென்றுக் கொண்டிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) மாலை சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்த போது காரை ஓட்டிய ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது.
உடனே 200 அடி உயரத்தில் இருந்த கசாங் லா எனும் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றுக்குள் கார் விழுந்தது. தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை கயிறு கட்டி மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வெற்றியின் ஐஃபோன் கிடைத்துள்ளது. அது போல் அங்கு பாறை இடுக்கில் மனித மூளை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீஸார் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது போல் சைதை துரைசாமியின் டிஎன்ஏவும் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 5 நாட்களாக வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெற்றி துரைசாமியின் உடைகள் கிடைத்தன. அவருடைய சூட்கேஸ், உடமைகள் கிடைத்துள்ளன. ஒரே காரில் டிரைவருடன் சேர்த்து 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
அவர்களில் ஓட்டுநர் டென்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால்தான் கார் ஆற்றில் கவிழ்ந்தது. அந்த அதிர்ச்சியில் கூட அவர் இறந்திருப்பார். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த வெற்றியின் நிலை தெரியவில்லை. ஆனால் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த கோபிநாத் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தாராம். ஆனால் வெற்றி துரைசாமி சீட் பெல்ட் அணியவில்லையாம். ஒரு வேளை வெற்றியும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications