Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே அதிகபட்சமாக பெட்ரோல் விலை ரூ 200.. குறைந்தபட்சம் ரூ 2.. எங்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகிலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 2க்கு விற்கப்படுகிறது. எங்கு தெரியுமா?

Recommended Video

    சென்னை: 110 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் 1 லிட்டர் பெட்ரோல்.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

    இந்தியாவில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் நான்கரை மாதங்களாக உயராத பெட்ரோல் டீசல் விலை தற்போது கடந்த இரு வாரங்களாக அன்றாடம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 16 நாட்களில் இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் இல்லத்தரசிகளும் சிறிய ஓட்டல் வைத்திருப்போரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

     ஈரோடு

    ஈரோடு

    இந்த நிலையில் தமிழகத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை 109 ரூபாய் வரை சென்றது. இதையடுத்து இன்றைய தினம் சென்னையில் லிட்டர் ரூ. 110.85க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. அது போல் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.100.94 விற்பனையாகிறது.

    பொது போக்குவரத்து

    பொது போக்குவரத்து

    இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை நாடத் தொடங்கிவிட்டனர். பேரல் கச்சா எண்ணெய் 99 டாலருக்கு குறைந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இந்த நிலையில் உலகிலேயே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 2 க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது.

    டிசம்பர் மாதம் விலை

    டிசம்பர் மாதம் விலை


    இது டிசம்பர் மாத விலை பட்டியலாகும். வெனிசுலாவில் ரூ 1.86 க்கும் ஈரானில் ரூ 4.397 க்கும் அங்கோலாவில் ரூ 17.773க்கும், அல்ஜீரியாவில் ரூ 25.032க்கும் குவைத்தில் ரூ 25.133 க்கும் சூடானில் ரூ 27.407க்கும் கஜகஸ்தானில் ரூ 29.657 க்கும் கத்தாரில் ரூ 29.825 க்கும் பெட்ரோல் விலை விற்கப்படுகிறது.

     அதிக விலை

    அதிக விலை

    அதாவது தண்ணீரின் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோல் விலை விற்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு 25 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. மிகவும் அதிகமாக ஹாங்காங்கில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 194.86 க்கு விற்பனை செய்யப்படுகிரது. அது போல் இஸ்ரேலில் 164.65க்கு விற்பனையாகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+