வந்தே பாரத் இல்லை.. இந்தியாவின் டாப் 5 அதிவேக ரயில்கள் எதெல்லாம் தெரியுமா..இதோ லிஸ்டை பாருங்க
டெல்லி: இந்தியாவில் அதிவேகமாக செல்லகூடிய டாப் 5 ரயில்கள் எவை என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வந்தே பாரத் ரயில் இல்லை என்பது பயணிகளுக்கு சற்று வியப்பை கொடுக்கலாம். அப்படியானால் முதல் இடத்தில் இருக்கும் ரயில் எதுவென்று கேட்கிறீர்களா.. அதன் விவரத்தை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் தங்கள் பயண தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான் என்றால் மிகையல்ல. மலிவான கட்டணம், பாதுகாப்பானது மற்றும் சவுகரியமானது என்பதால் பயணிகள் பலரும் தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ரயில்களில் செல்லத்தான் விரும்புவதுண்டு. ஏனெனில், பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உண்டு.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கழிவறைகள், சவுகரியாக நடந்து செல்லும் அளவிற்கு ரயில்களில் இட வசதி இருக்கும். இதனால், வயதான பயணிகள் மற்றும் குழந்தைகளுடன் செல்பவர்களுக்கு ரயிலில் செல்வதே சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் பயணிகள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் யோசிக்காமல் நேராக ரயில்களில் புக் செய்து பயணிப்பதை பார்க்க முடிகிறது.
பண்டிகை நாட்களில் மட்டும் இன்றி முக்கிய வழித்தடங்களில் எப்போதும் டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை பார்க்க முடியும். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு வசதிகள் கொண்ட ரயில்களை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிவேக ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரயிலின் அதிக பட்ச வேகம் 180 கி.மீட்டர் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ள சொகுசு வசதிகள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அது இயங்கும் வேகம் குறித்த சில அதிருப்திகளும் பயணிகள் மத்தியில் இல்லாமல் இல்லை. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் அதிவேகத்தில் இயக்கப்படும் டாப் 5 ரயில்கள் எதெல்லாம் என்று இங்கே பார்க்கலாம்;
கதிமான் எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்ற ரயில் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். சூப்பர் பாஸ்ட் ரயிலான இந்த ரயில், தெற்கு டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிசாமுதின் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீட்டர் ஆகும். இதேவேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டாலும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் சராசரி வேகம் வந்தே பாரத் ரயிலை விட அதிமாக உள்ளது. இதனால், இந்தியாவின் டாப் 5 அதிவேக ரயில் பட்டியலில் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் இடத்தில் உள்ளது

2ஆம் இடம்: இந்தியாவின் அதிவேகமாக செல்லும் ரயில்களின் வரிசையில் இரண்டாம் இடம் வந்தே பாரத் பெறுகிறது. தற்போது நாடு முழுவதும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி - போபால் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தை எட்டியது. வந்தே பாரத் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
* இந்த பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கும் ரயில் எதுவென்றால் போபால் - நியூடெல்லி சதாப்தி ரயிலாகும். அதிகபட்சமாக இந்த ரயில் மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.
* புதுடெல்லி- மும்பை இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும் இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.
*இந்தியாவின் டாப் 5 ரயில்கள் வரிசையில் டெல்லியில் இருந்து சீல்டா ரயில் நிலையம் வரை இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் பிடித்துள்ளது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 135 கி.மீட்டர் வேகம் ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications