ஐய்யோ! உலகிலேயே மிகப் பெரிய வீடு.. பூரா தங்கம்தான்.. புர்ஜ் கலிபாவை கட்டியவரே வடிவமைத்தாராம்!
டெல்லி: இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டை விட உலகின் மிகப் பெரிய வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது புருனே சுல்தான் குடியிருக்கும் வீடு!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீடு உலகின் காஸ்ட்லி வீடுகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். இந்த வீடு 4 லட்சம் சதுர அடி கொண்டது. இதன் உயரம் 500 அடியாகும். இந்த வீட்டில் பணியாளர்கள் 600க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் தங்குவதற்கும் அன்டீலியாவில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27மாடிகளை கொண்ட வீடாகும். இதில் முதல் 7 தளங்கள் வரை கார் பார்க்கிங். உலகிலேயே மிகவும் விலை மதிப்புள்ள வீடான அன்டீலியா ரூ 15 ஆயிரம் கோடி மதிப்புடையது.
50 பேர் உட்கார்ந்து பார்க்கும் தியேட்டர், மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, மருத்துவமனை, கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன. அது போல் இங்கு பனி அறை உள்ளது. இந்த அறையில் சுவற்றில் இருந்து பனி உருகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கும். அங்கு 9 அதிவேக லிப்ட்கள் உள்ளன.
அன்டீலியாவின் சிறப்பம்சங்களை படிக்கும் போதே ஆஹா நாம் இந்த வீட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என கனவு உலகத்திற்கு சென்றுவிடுகிறோம். ஆனால் இதை விட மிகப் பெரிய வீடு இருக்கிறதராம். அதாவது உலகிலேயே மிகப் பெரிய வீடு என்ற பெருமையும் இதற்கு உண்டாம். அதுதான் புருனே நாட்டு சுல்தானின் வீடு.

அந்த மாளிகையின் பெயர் இஸ்தானா நூருல் இமான் ஆகும். புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா அந்நாட்டின் 29ஆவது பிரதமராகவும் இருந்து வருகிறார். இவர் முடிசூட்டிய பிறகு பல ஆண்டுகளாக இந்த மாளிகையில் இருந்து வருகிறார். இந்தியாவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை விட இது புருனே சுல்தான் அரண்மனை பெரியது. குஜராத்தில் இருக்கும் இந்த அரண்மனை 8 லட்சம் சதுர அடிதான்.
ஆனால் புருனே சுல்தானின் மாளிகை 22 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தன் பெயரை பதித்துள்ளது இஸ்தானா மாளிகை. இந்த மாளிகையின் பெரும்பகுதி தங்கத்தால் ஆனது. இங்கு 7 ஆயிரம் ஆடம்பர வாகனங்கள் உள்ளனர்.
இந்த மாளிகையின் மதிப்பு மட்டுமே ரூ 11,600 கோடி ஆகும். சுல்தானின் சொத்து மதிப்பு ரூ 2.49 லட்சம் கோடி ஆகும். அதில் கார்கள் மட்டும் 5 பில்லியன் டாலர் மதிப்பு என சொல்கிறார்கள். இந்த மாளிகையில் 257 பாத்ரூம்கள் உள்ளன. அறைகளின் எண்ணிக்கை 1,788 ஆகும். 5000 விருந்தாளிகள் தங்கும் அளவுக்கு ஹால் இருக்கிறது, 110 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி, 5 நீச்சல் குளங்கள், ஹெலிபேட், 1500 பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் அளவுக்கு மசூதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த வீடு 1984 இல் கட்டப்பட்டது. இந்த மாளிகையை லியோனார்டோ லாக்சின் வடிவமைத்தார். துபாய் புர்ஜ் கலிபாவை கட்டிய குவான் சியூதான் இந்த மாளிகைக்கு உள் அலங்காரம் செய்துள்ளார். தங்கம், மார்பிள் கொண்டு இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய நாடான இந்தோனேசியாவின் புருனேவில்தான் இந்த இஸ்தானா நூருல் இமான் மாளிகை அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications