லோக்சபாவில் மோடிக்கு வந்த சத்தியசோதனை.. எதிரே எழும் "இந்தியா"
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் பிரதமர் மோடி பேசிய போது எதிர்க்கட்சிகள் கூறிய வார்த்தையை கேட்டீர்களா?
வரும் 2024 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போராடி வருகிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுக்கவும் வலுவான முன்னணியை முன் வைக்கவும் பெங்களூரில் கடந்த மாதம் 26 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது. அதாவது தேசிய அளவில் இரு கூட்டணிகள் அதில் ஒன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியாகும். இந்த நிலையில் யூபிஏ என்ற பெயருக்கு பதிலாக வேறு புதிய பெயரை வைக்க எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தன.
அவ்வாறு 4 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் ஒரு பெயர் தேர்வு செய்யப்பட்டது. அதுதான் "இந்தியா" ("INDIA") இதன் விரிவாக்கம் என்னவென்றால் இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி. ஆங்கிலத்தில் I-Indian, N- National, D- Democratic, I- Inclusive, A- Alliance ஆகும். எதிர்க்கட்சிகள் என்ற பெயரை விட இவர்கள் இந்தியா கூட்டணி என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவை பிரபலமாக்கும் முயற்சியாக இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று பேசியதை கவனித்தார்களா. அதாவது மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த மாநில அரசோ மத்திய அரசோ தீர்வு காணவில்லை. இதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசி வருகிறார். அதில் எதிர்க்கட்சிகளை பிரதமர் கிண்டல் செய்யும் போதெல்லாம் பாஜக கூட்டணி எம்பிக்கள் மேஜையை தட்டியும், மோடி மோடி என முழங்கியும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அவ்வாறு கோஷமிட்ட போது எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து இந்தியா இந்தியா என கோஷமிட்டனர். இதை பார்க்கும் போது மோடி VS இந்தியா (இந்திய நாடு) என்ற பிம்பத்தை ஏற்படுத்தவே இந்தியா என கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டது போல் தெரிகிறது. அதை லோக்சபாவில் சோதித்து பார்க்கவே இந்தியா இந்தியா என எதிர்க்கட்சிகள் கோஷமிடுவதாக பார்க்கப்படுகிறது.
2024 இல் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் ஏறக் கூடாது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே விரும்புவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் இந்தியா இந்தியா என கோஷமிடுகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய நாடே திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications