பொய் பொய்.. மோடி & ராகுல்.. இவங்க 2 பேரில் யாருடைய பட்டப்படிப்பு ஆவணம் "டூப்ளிகேட்"? சுப்ரியா சுருக்
டெல்லி: பாஜக அமித் மால்வியாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா பதிலடி தந்து ட்வீட்டினையும் பதிவிட்டுள்ளார்.. இதையடுத்து, காங்கிரஸ் + பாஜக இரு தரப்பினரின் ஐடி விங்கும், அனலடித்து கொண்டிருக்கிறது.
ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன... கட்சி தொண்டர்களும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தது..

பிரியங்கா நறுக்
போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை.. மேலும், காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பித்துவிட்டனர்.. எனினும் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.. இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தியின் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.. பாஜகவை கடுமையாக தாக்கி பேசியதுடன், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்திருந்தார்.. அத்துடன், ஆவேசமாகவும், கோபமாகவும், வருத்தத்திலும் பிரியங்கா தன் பேச்சினை பதிவு செய்திருந்தார்..

பப்பு பப்பு
பிரியங்கா பேசும்போது, "என்னுடைய அண்ணன் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்புகளை படித்து முடித்திருக்கிறார்.. இந்த பல்கலைக்கழகங்கள் உலகில் தலைசிறந்தவையாக திகழ்கின்றன.. ஆனாலும் என் அண்ணனை "பப்பு" என்று அழைக்கிறார்கள்... பாரத் ஜோடோ யாத்திரையில் அவருடன் பல லட்சம் மக்கள் நடந்து வந்ததை பார்த்ததுமே, அவர் "பப்பு" இல்லை என்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளார்கள்.. ராகுல் ஏழை மக்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் புரிந்து பேசி வருகிறார். இதனால் அவரை பார்த்து பாஜகவினர் பயப்படுகின்றனர்... நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க முடியாத வகையில் ராகுல் கேள்விகளை கேட்டார்.. என் அண்ணனை பார்த்து பயந்தவர்கள் தான், அவரை நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமல் செய்வதற்காகவே இப்படி தகுதி நீக்கம் செய்துள்ளனர்" என்று சீறியிருந்தார்.

பொய்யர்கள்
பிரியாங்காவின் இந்த பேச்சுக்கு பாஜக பதிலடி தந்திருந்தது.. பாஜகவின் ஐடி பிரிவு தலைவரான அமித் அமித் மால்வியா இதுகுறித்து ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.. அதில், ராகுல் காந்தியின் தேர்தல் வேட்பாளர் ஆவணங்கள் உட்பட எதிலுமே, அவர் ஹார்வார்டு பல்கலையில் படித்ததாக இல்லை... பிரியங்கா குறிப்பிட்டது மட்டுமல்ல, அவர்களின் மொத்த குடும்பமே பொய்யானது" என்று கடுமையாக தாக்கினார்.

சுப்ரீயா சரவெடி
இந்த ட்வீட்டை பார்த்ததும், பதிலுக்கு காங்கிரஸ் ஐடி பிரிவு பதிலடி தந்துள்ளது.. காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவரான சுப்ரியா, "1991ல் ராஜீவ் காந்தி படுகொலையானதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ராகுல் காந்தி, இன்னொரு பல்கலைக்கு மாற்றப்பட்டார். வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் பயின்று, போலி செய்திகளை பரப்பும் பாஜகவுக்கு இதெல்லாம் எப்படி புரியும்? மோடிக்கான "பொலிடிகல் சயின்ஸ்" பட்டப்படிப்பு போலி சான்றிதழ்களை உருவாக்கியவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்" என்று நறுக்கென பதிலடி தந்துள்ளார்.

கமெண்ட்கள்
ராகுல்காந்தியின் பதவி பறிப்பு விவகாரம், தேசம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்நிலையில், சத்தியாகிரக போராட்டமும் வெடித்து கிளம்பி வருகிறது.. இதற்கு நடுவில், பிரதமர் மோடி மற்றும் ராகுலின் பட்டப்படிப்பு ஆவணங்களை முன்வைத்து, புதிய விவாதம் சோஷியல் மீடியாவில் கிளம்பி பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. இதற்கு காங்கிரஸ் + பாஜக என இரு தரப்பினருமே கிளம்பி வந்து கமெண்ட்களை தாறுமாறாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications