வொர்க் பிரம் ஹோம்.. உட்கார்ந்த இடத்தில் வேலையா.. அப்படியென்றால் ஃபேட்டி லிவர் நோய் ஜாக்கிரதை!
டெல்லி: கொரோனா லாக்டவுனுக்கு பிறகு கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து வீங்கும் நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 19ஆம் தேதி உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை நச்சு நீக்குவது முக்கியமானதாகும்.
பெரிய வளர்சிதை மாற்ற உறுப்பான கல்லீரல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி கல்லீரல் குறித்த விழிப்புணர்வுகள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலான கல்லீரல் நோய்களை எப்படி தடுப்பது என்பது குறித்தும் விளக்கப்படுகிறது.

கல்லீரல் நோய்கள்
பெரும்பாலான கல்லீரல் நோய்கள் வருவதற்கு முன்பே தடுக்கக் கூடியவையே. வீட்டிலிருந்தபடியே பணியாற்றுதல், எந்த இடத்திற்கும் நகராமல் லாக்டவுன் காலத்தில் பணியாற்றியது கல்லீரல் தொடர்பான நோய்களை அதிகரிக்கும். இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில் பெரும்பாலானோருக்கு ஏற்படக் கூடும் கல்லீரல் நோய் எதுவெனில் கொழுப்பு சேரும் கல்லீரல்தான்.

10 பேருக்கு சோதனை
குறிப்பாக மது அருந்தாதவர்களுக்கு இந்த நோய் ஏற்படும். நோயாளிகளில் 40 சதவீதமானோருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவர் மலர்விழி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுகுடிக்காதவர்களுக்கு மிகவும் அரிதான இந்த கல்லீரல் நோய் இருக்கும். 10 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் அதில் ஒருவருக்கு நோய் இருக்கும்.

10 பேருக்கு பரிசோதனை
ஆனால் தற்போது 10 பேருக்கு சோதனை செய்தால் அதில் 4 முதல் 5 பேருக்காவது கல்லீரல் நோய் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கொழுப்பு நிறைய கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் இருந்த போதும் கொரோனாவுக்கு பிறகு இந்த நோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வீட்டிலிருந்து ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே பணியாற்றுவதுதான்.

வாழ்க்கை முறை
இதற்கு காரணம் வாழ்க்கை முறை, உடல் பருமன், சர்க்கரை வோய் டிப்லிபிடீமியா, தாமதமாகும் உணவு பழக்கமாகும் என்றார். இதுகுறித்து க்ளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியை சேர்ந்த ஜோய் வர்கீஸ் என்ற மருத்துவர் கூறுகையில் நீரிழிவு, உயர் ரத்தம் அழுத்தம் போல் கல்லீரல் நோய் ஏற்டுகிறது. இதன் மூலம் மாரடைப்பு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
இந்த நோயை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். முன் கூட்டியே இந்த நோயை கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். கொழுப்பு கல்லீரல் நோயை மிகவும் வேகமாக குணப்படுத்தலாம். நல்ல உணவு பழக்கவழக்கங்கள், மது அருந்தாமல் இருப்பது, தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளாதல், கட்டுக்குள் இருக்கும் நீரிழிவு உள்ளிட்டவைகளால் ஆரோக்கியமான கல்லீரை பெற முக்கியமானவையாகும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications