"ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம்".. இந்துத்துவா அரசியலை கையில் எடுக்கும் கேஜ்ரிவால் - பரபர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூபாய் நோட்டுகளில் இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் திடீர் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பின்னால் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் இந்துத்துவாவுக்கு எதிரானவர் என பாஜக கூறி வரும் நிலையில், அந்த பிம்பத்தை மாற்றுவதற்காக அவர் இவ்வாறு கூறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி, எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துத்துவா ஆதரவு வாக்குகளை பெறுவதற்காகவும் கேர்ஜிவால் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

'இந்துத்துவா' எதிர்ப்பு அரசியல்..

'இந்துத்துவா' எதிர்ப்பு அரசியல்..

ஆரம்பக் காலக்கட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் அரசியலுக்கு நுழையும் போது சில கொள்கைகளில் தீவிரமாக இருந்தார். அவற்றில் ஊழல் எதிர்ப்பும், இந்துத்துவாக எதிர்ப்பும் முக்கியமானவை. கடந்த காலங்களில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவை இந்துத்துவா அரசியல் செய்து வருவதாக கேஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்திருக்கிறார். அதேபோல, இந்து மதம் தொடர்பாக பாஜக கூறிய கருத்துகளுக்கு காட்டமான வார்த்தைகளிலும் அவர் பதிலடி தந்திருக்கிறார். இதனால் அவரை பாஜக 'இந்துக்களின் எதிரி' என பிரச்சாரம் செய்தது. ஆனால், அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவித்ததில்லை.

 வியக்க வைத்த அனுமார் கோயில் விஜயம்

வியக்க வைத்த அனுமார் கோயில் விஜயம்

இவ்வாறு இந்துத்துவா எதிர்ப்பை முக்கியமான ஆயுதமாக கையில் எடுத்து வந்த கேஜ்ரிவால், அரசியல் களம் மாறுவதை சிறிது தாமதமாக உணர்ந்து கொண்டார். பாஜகவின் இந்துத்துவா பிரச்சாரம் பெரும்பாலான மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதை புரிந்துகொண்ட கேஜ்ரிவால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்துத்துவா எதிர்ப்பை பெரிய அளவில் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மேலும், பாஜகவை விமர்சிக்கும் போது அதன் இந்துத்துவா கருத்துகளை விமர்சிப்பதையும் தவிர்த்து வந்தார். அதுமட்டுமின்றி, ஆம் ஆத்மி தலைவர்கள் இந்து மதத்திற்கு எதிராக ஏதும் கருத்து தெரிவித்தால், அதை கண்டிப்பதையும் வழக்கமாக்கி கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனுமார் கோயிலுக்கு திடீர் விஜயம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கேஜ்ரிவால். இதனால் கேஜ்ரிவால் மித இந்துத்துவாவாதத்தை கடைப்பிடிக்க தொடங்கி இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

மித இந்துத்துவா அரசியல் - காலத்தின் கட்டாயம்

மித இந்துத்துவா அரசியல் - காலத்தின் கட்டாயம்

இதனிடையே, எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தீவிரமாக களமாடி வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி, கேஜ்ரிவாலுக்கு பெரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது. இந்த நம்பிக்கை காரணமாகவே தற்போது குஜராத் சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால். பாஜகவின் கோட்டையாக குஜராத் விளங்கி வரும் போதிலும், தற்போது அங்கு பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி பாஜகவை வீழ்த்த கேஜ்ரிவால் வியூகம் அமைத்து வருகிறார். ஆனால், குஜராத்தில் இந்துத்துவா அரசியலுக்கு என தனி வாக்குகள் இருக்கின்றன என்பதை கேஜ்ரிவால் தெரிந்து கொண்டிருக்கிறார். எனவே, அந்த இந்துத்துவா வாக்குகளை பெற வேண்டுமானால், தன்னை மித இந்துத்துவாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ளது.

'விநாயகர் படம் அச்சிட வேண்டும்'

'விநாயகர் படம் அச்சிட வேண்டும்'

இதன் காரணமாகவே, தற்போது திடீரென அர்விந்த் கேஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் எனக் கூறியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். அர்விந்த் கேஜ்ரிவாலின் கடந்த கால பிரச்சாரங்களையோ, கருத்துகளையோ உற்று பார்த்தோமேயானால் அவர் இதுபோன்று வெளிப்படையாக இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் புகழ்ந்து பேசியதில்லை. ஆனால் பாஜக தலைவர்களுக்கே சவால் விடுக்கும் வகையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என கேஜ்ரிவால் இப்போது பேசியிருப்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+