காங்கிரஸ் வாக்குறுதி சாத்தியமற்றதா? நிர்மலா சீதாராமனை லிஸ்ட் போட்டு அட்டாக் செய்த காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அதீத வாக்குறுதிகளை அளித்து இருப்பதாகவும் அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கேள்வி எழுப்பிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜெய்ராம் ரமேஷ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளையும் அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நேரடியாக செலுத்தப்படும். அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்று பாஜக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
அதீத வாக்குறுதிகளா?: காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை அதீத வாக்குறுதிகள்(lofty promises) என்று சொல்லியிருக்கும் நிர்மலா சீதாரமன், நிதி அளவிலும் அதிக செலவுமிக்கது என்று கூறியுள்ளார்.
நிதி நெருக்கடி: கடந்த 20 ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகிய அனைத்துமே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அதிகமாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் போது மோடி ஆட்சியை விட குறைவான நிதி பற்றாக்குறை மற்றும் குறைவான தேசிய கடனே இருந்தது.
2004 ஆம் ஆண்டிலும் இதே வதந்தியையும் பயமுறுத்தும் வேலையைத்தான் பாஜக செய்து தோல்வி கண்டது. அதன்பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்து, இந்தியாவின் சிறந்த பொருளாதார செயல்திறனை வெளிப்படுத்தி காட்டியது. அத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் நிதி நெருக்கடி நிலவியது.
மகாலட்சுமி திட்டம்: எழை பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கும் மகாலட்சுமி திட்டம், டிகிரி முடித்த இளைஞர்களுக்கு 25 வயது வரை 1 லட்சம் ரூபாய் பயிற்ச்சிக்காக வழங்கப்படும் போன்ற திட்டங்கள் எல்லாம் அதீத வாக்குறுதிகளாக நிர்மலா சீதாராமனுக்கு தெரிவதில் ஆச்சர்யம் இல்லை. விலை வாசி உயர்வின் போது நான் வெங்காயம் சாப்பிடவில்லை என பொறுப்பற்ற கருத்துக்களை கூறியவர்தான் நிர்மலா சீதாராமன்.
மோடியின் நண்பர்களுக்கு: பிரதமர் தனது கூட்டாளிகளுக்கு 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தது, பெரு நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி குறைத்தது எல்லாம் நிர்மலா சீதாராமனுக்கு அதீதமாக தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை எல்லாம் முறையாக இந்தியா கூட்டணியின் அரசங்கத்தால் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
நாட்டில் உள்ள 99 சதவிகித மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை மட்டுமே மோடி அரசு இலவசங்கள் என முத்திரை குத்தும். அதேவேளையில், மோடியின் நண்பர்களுக்கு அளிக்கப்படும் பல லட்சம் கோடிகள் இந்த கேட்டகிரியில் வராது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், மக்களுக்கு எதிரான கொள்கைகள் வரும் ஜூன் 4 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications