Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரி விலக்கு ஓகே.. ரூ.12 லட்சத்திற்கு கீழ் சம்பாதிப்போர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்ற மேஜர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையே ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு என்றால்.. அப்போது அதற்குக் கீழ் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையில்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

budget 2025 union budget 2025 income tax 2025

அதன்படி இனி ஆண்டுக்கு ரூ 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மாத சம்பளதாரர்களாக இருந்தால் நிலையான விலக்குடன் சேர்ந்து ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டி இருக்காது.

ரூ.12 லட்சம் வரை வரி இல்லை:

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு (மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானம் தவிர்த்து), ஸ்லாப் விகிதக் குறைப்புடன் சேர்த்துக் கூடுதலாக வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

மேலும், புதிய வருமான வரி முறையின் கீழ், ரூ.75,000 நிலையான விலக்கு கிடைக்கும். எனவே, மொத்தம் ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட சம்பளதாரர்களுக்கு புதிய வரி முறையில் வரி இருக்காது" என்று அறிவித்தார். பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் செலவுகளால் மிடில் கிளாஸ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

தாக்கல் செய்ய வேண்டுமா:

அதேநேரம் பலருக்கு ஒரு கேள்வி வரும். அதாவது ரூ.12.75 லட்சம் வரை வரி விலக்கு என்றால்.. அப்போ அதற்குக் கீழ் சம்பாதிப்போர் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தேவையில்லையா என்ற கேள்வி பலருக்கும் எழும்.. ஆனால், அது அப்படி இல்லை. ரூ.12 லட்சத்திற்குக் கீழ் சம்பாதித்தாலும் வருமான வரியை நாம் தாக்கல் செய்தாக வேண்டும். பழைய வரி முறையில் இருப்போர் ரூ.2.5 லட்சம், புதிய வரி முறையில் இருப்போர் ரூ.4 லட்சம் மேல் சம்பாதித்தால் அவர்கள் வருமான வரி கணக்கை நிச்சயம் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், வருமான வரியைத் தாக்கல் செய்வது என்பது ஒருவரது வருமானத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. அவர் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதைப் பொறுத்து இல்லை. அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வரிச்சலுகை (Rebate) காரணமாக ஒருவர் வரி செலுத்தத் தேவையில்லை என்ற போதிலும், அவர் வருமான வரியை நிச்சயம் தாக்கல் செய்ய வேண்டும்.

வரி விகிதம்:

தற்போதுள்ள சட்டத்தின் படி புதிய முறையில் இருப்போருக்கு ரூ 4 லட்சம் வரை வரி இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5% வரி, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 12-16 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.16 முதல் 20 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.20-24 லட்சத்தில் 25 சதவீதம், ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். இதில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிச்சலுகை (Rebate) வழங்கப்படும்.

அதாவது புதிய வரி முறையில் இருப்போரில் ரூ.4 லட்சம் வரை மட்டுமே வரி இல்லை. ரூ.4 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிச் சலுகையே வழங்கப்படுகிறது. அதாவது ரூ.12 லட்சம் வரை வரி இல்லை என்றாலும் வரி விலக்கு ரூ.4 லட்சத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, ரூ.4 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்கள் அனைவரும் நிச்சயம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ரூ.4 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள்:

புதிய முறை தேர்வு செய்து ரூ.4 லட்சத்திற்குக் கீழ் வருமானம் வைத்திருப்போர் மட்டுமே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. அதேநேரம் வெளிநாடுகளுக்குச் செல்ல எளிதாக விசா பெறுவது, லோன் எடுப்பது உள்ளிட்டவற்றுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது முக்கியாக பார்க்கப்படுகிறது. எனவே, ரூ.4 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தாலும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றே வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+