"ரூ. 2000 நோட்டுகள்.." டெபாசிட் செய்வதால் யாருக்கு லாபம்.. ரூபாய் நோட்டுகளை மாற்ற கட்டணம் இருக்கா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இப்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சுமார் 85% வரை 500,1000 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருந்த நிலையில், அவை ஒரே இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

 Does RBI announced any charge to change 2000 rupee notes

பொதுமக்கள் வங்கிகளில் சென்று தங்கள் 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அப்போது ரொக்கத்திற்குத் தட்டுப்பாடு இருந்ததால் நிலைமை சரியாகவே சுமார் 6 மாதங்கள் வரை கூட ஆனது.

ரூபாய் நோட்டுகள்: அப்போது புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அப்போது ரொக்கத்திற்குத் தட்டுப்பாடு இருந்த நிலையில், அதைச் சமாளிக்க இது பெரியளவில் உதவியது. இருப்பினும், சில்லறை கிடைப்பதில்லை உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலும் பொதுமக்கள் இந்த 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதைக் குறைத்தே வந்தனர்.

அப்போதே மத்திய அரசு விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இருப்பினும், அதை மத்திய அரசு மறுத்தே வந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போதும், அப்படி எந்தவொரு திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை என்றே மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி: அதேநேரம் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான நோட்டாக தொடரும் என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. 2016இல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், 2018-19ஆம் ஆண்டில் இந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

இந்த நடவடிக்கை பொதுமக்களுக்குச் சற்று அச்சத்தைத் தரலாம். மீண்டும் வங்கிக்குச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று அச்சப்படலாம். இருப்பினும், அதற்கு இன்னும் மாதக் கணக்கில் டைம் இருக்கவே செய்கிறது.

வங்கிகளுக்கு லாபம்: அதேநேரம் வங்கிகள் இதை பாசிட்டிவ் செய்தியாகவே பார்க்கிறார்கள். இது குறித்து ரேட்டிங் நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசன் கூறுகையில், "இதன் மூலம் வங்கிகளின் வைப்புத்தொகை ஓரளவு மேம்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். டெபாசிட் விகிதம் குறைந்து வருவது சமீபத்தில் வங்கிகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதை ஓரளவுக்குக் குறைக்கும். மேலும், குறுகிய கால வட்டி விகிதங்களுக்கும் இது உதவும்" என்றார்.

புழக்கத்தில் உள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாக இருக்கிறது. 2018 மார்ச்சில் அதிகபட்சமாக ரூ.6.73 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு இது மெல்லக் குறைந்தே வந்துள்ளது.

கட்டணம் இல்லை: வரும் மே 23ஆம் தேதி தொடங்கி செப். மாதம் வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித கட்டணமும் இல்லை. அதற்கு யாராவது கட்டணம் இருக்கிறது எனச் சொன்னால் அதை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+