முதலீடுகளில் ஆர்வமா? அடிப்படையை கற்றுக்கொள்ள விலை உயர்ந்த கோர்ஸ்கள் தேவையில்லை - சந்தீப் ஜெத்வானி
டெல்லி: டிசர்வ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சந்தீப் ஜெத்வானி ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக நேர்காணாலை வழங்கி இருக்கிறார். அதில், முதலீடுகள், ஆவண தயாரிப்பு, அடிப்படைகளை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம், மாற்று முதலீடுகள், முதலீடுகளில் இருக்கும் அபாயங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். அவரிடம் நாம் எழுப்பிய கேள்விகளையும் அதற்கு அவரளித்த பதில்களையும் காண்போம்.
கேள்வி: 25 வயதுடைய ஒரு முதலீட்டாளர் தனது வருமானத்தில் 15 சதவீதத்தை மாற்று முதலீடுகளுக்கு ஒதுக்குவதற்கு செய்ய வேண்டிய 3 விஷயங்கள் என்ன?
மாற்று முதலீடுகளை எடுத்துக்கொண்டால் வென்சர் கேபிடலிஸ்டாக புதிய நிறுவனங்களில் முதலீடு செய்யலாம், ஹெட்ஜ் நிதி, தங்க பத்திரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளைகள் அல்லது உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், கடன் பத்திரங்கள், கிரிப்டோ கரன்சிகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இவற்றை செய்வதற்கு முன்பாக 3 விசயங்களை மனதில்கொள்ள வேண்டும்.
1. உருவாக்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் - இவை வழக்கமான முதலீடுகளில் இருந்து எப்படி வேறுபடுகின்றன? முதலீடு செய்வதற்கான வரம்பு, பணப்புழக்கம், வருவாய், சொத்து நிலவரம் போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
2. நெருக்கடி மேலாண்மை - இது ஒரு புதிய துறை. மற்றவற்றை ஒப்பிடும்போது வரையறுக்கப்பட்ட விதிகளும், தரவுகளும் இதற்கு குறைவு. எனவே கூடுதல் ரிஸ்க் இருக்கும். பணப்புழக்கம் இல்லாமலும் இருக்கலாம். அவசரமாக முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
3. முதலீட்டு செய்த பின் கண்காணிப்பது - மாறிவரும் சந்தையின் இயக்கவியல், ஒழுங்குமுறை வழிகாட்டுமுறைகள் போன்றவற்றை தீவிரமாக பின்பற்றி கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக முதலீடு செய்யும் துறையில் முதலீட்டாளருக்கு நிபுணத்துவம் இருக்க வேண்டும்.
கேள்வி: முதலீட்டில் ஆர்வம் கொண்ட புதிய பட்டதாரிகளுக்கு நீங்கள் கூறும் 2 அறிவுரைகள் என்ன?
முதலீடுகள் குறித்து கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அடிப்படைகளை அறிந்துகொள்ள வேண்டும். நீண்ட காலம் முதலீடு செய்யும் நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். டிசர்வ் நிறுவனம் முதலீடுகள், தனிநபர் நிதித்திட்டம் போன்றவை தொடர்பாக மக்களுக்கு கற்பித்து வருகிறது. இணையதள கட்டுரைகள், விளக்க தொடர்களை வெளியிட்டுள்ளோம். நமது இணையதளத்திலும் யூடியூப் சேனலிலும் பாட்காஸ்ட்களை இலவசமாக காணலாம்.
அடுத்து நாம் பொறுமை காத்து சந்தை நிலவரம் மற்றும் வணிக அடிப்படைகள் தொடர்பாக பரிசீலிக்க வேண்டும். பரபரப்பான நகர்வுகள், இலவச பங்குச்சந்தை ஆலோசனைகளுக்கு இரையாகிவிடக்கூடாது. அனுபவம் வாய்ந்த நல்ல நிபுணர்களிடம் பொருளாதார ஆலோசனைகளை பெற வேண்டும். பொருளாதார சூழல் மற்றும் இலக்குகளை மனதில் வைத்து நமக்கென ஒரு முதலீட்டு வியூகத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ETF நிதியை எப்படி வகைப்படுத்துவது? இவ்விரண்டு முதலீட்டு முறைகளுக்கு எப்படி தனித்தனியாக நிதி ஒதுக்குவது?
மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டாளர்களின் குழுவிலிருந்து நிதியை திரட்டி பங்குகள், பத்திரங்கள், இதர சொத்துக்களில் முதலீடு செய்வதாகும். அதை நிதி மேலாளர் ஒருவர் நிர்வகிப்பார். அவர், நிதி பங்கீடு குறித்த ஆவணங்களை பராமரிப்பதையும் கவனிப்பார். ETF என்பது குறிப்பிட்ட துறை, பொருட்கள் அல்லது இதர சொத்துக்களை கண்காணிக்கும் பத்திர தொகுப்பு. இவை நேரடியாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதால் வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெறும். பணப்புழக்கம், நிதி செலவு, திரும்ப கிடைக்கும் நிதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு எதில் முதலீடு செய்வது என்பது குறித்து முடிவெடுக்கலாம். இது தொடர்பாக முதலீடு நிபுணருடன் ஆலோசனை பெற்று திட்டமிட வேண்டும்.
கேள்வி: அளவு முதலீடுகள் (Quantitative Investment) எவ்வாறு செயல்படுகின்றன? அதற்கு எந்த தரவுகளை நாம் பார்வையிடுவது?
அளவு முதலீடு என்பது நவீன கணித முறையை கொண்டு பழைய தரவுகளை வைத்து தற்போதைய மாதிரிகளையும் போக்குகளையும் அறிந்து முதலீடு செய்வதாகும். இதனை கொண்டு நிதி ஒதுக்கீடு மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். முதலீடுகளில் இருக்கும் ஆபத்துகள், சுயவிபரத்தின் அடிப்படையில் பரிந்துரைகளை இதில் வழங்க முடியும். அறிவியல் சார்ந்த முறையான முதலீட்டு வழி இது.
டிசர்வ் நிறுவனம் ஆவணங்களை தயாரிக்க Black-Litterman போன்ற நவீன ஆவண மாதிரிகளையும் கட்டமைப்புகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. ஏஎம்சி , ஆவண காப்பக செயல்திறன், பொருளாதார தரவுகள், செலவுகள், கடன் மதிப்பு, மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்ட பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளன.
கேள்வி: கிராமபுற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொருளாதார விழிப்புணர்வை வழங்க என்னென்ன வழிகளை கையாள்வீர்கள்?
நமது பொதுத்துறை வங்கிகளில் ஜந்தன் கணக்கு, ஆதார், மொபைல் எண்கள் வைத்திருக்கும் கிராம மக்களுக்கு ரிசர்வ் வங்கி பொருளாதார விழிப்புணர்வுகளை வழங்குகிறது. நாங்கள் சமூக வலைதளங்கள், இணையதளம், ஊடகங்களின் மூலமாக பிரச்சாரம் செய்கிறோம். யூடியூப் சேனல்கள் இணையதள கட்டுரைகள், செய்தி அறிக்கைகள் வாயிலாக கிராமபுற இந்திய மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
கேள்வி: 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ரியல் எஸ்டேட் முதலீடு குறித்து எப்படி சிந்திப்பது? அவர்கள் எந்தெந்த வழிகளை கூர்ந்து நோக்க வேண்டும்?
வரலாற்று ரீதியாகவே ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு அதிக தொகை தேவைப்படுகிறது. இதில் புதிதாக REIT எனப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை, உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை போன்றவை வந்திருக்கின்றன. இவையும் மியூச்சுவல் ஃபண்ட் போல குழுவாக நிதியை திரட்டி நிலங்கள், உணவகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதாகும்.
இதன் மூலம் தினசரி சொத்துக்களை நிர்வகிக்க வேண்டிய அவசியம் குறைந்து வருவாய் மற்றும் மூலதன மதிப்பின் பலனை பெற முடியும். வழக்கமான ரியல் எஸ்டேட் முதலீடுகளில் காணப்படும் பணப்புழக்கம் மற்றும் தகவல் குறைபாட்டின் சிக்கல்களுக்கு இது தீர்வு காண்கிறது. நிலையான நீண்டகால வருமானத்துக்கு உறுதி செய்கிறது. முதலீட்டில் முக்கியமான ஒன்று ரியல் எஸ்டேட். ஆனால், அனைத்தையும் செய்வதற்கு முன்பாக முதலீட்டில் அனுபவம் கொண்ட நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications