பிறரிடத்தில் கருணை காட்டுங்கள்.. தன்னலமற்ற செயல் மூலம் மனிதருக்கு பாடம் கற்பிக்கும் நாய்கள்- வீடியோ
டெல்லி: ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வெட்டுக்கிளியை அது மூழ்கிவிடாமல் நாய் ஒன்று வாயால் கவ்வி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
விலங்குகள் நமக்கு ஏராளமானவற்றை சொல்லித் தருகின்றன. அவை நமக்கு சிறந்த ஆசான்களாக திகழ்கின்றன. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் செயலை எந்த வித தயக்கமும் இன்றி அவை செய்கின்றன.
தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. அதில் நாய் ஒன்று வருகிறது.

தண்ணீரிலிருந்து
பார்ப்பதற்கு தண்ணீர் குடிப்பது போல் உள்ளது. ஆனால் சில வினாடிகள் கழித்து பார்த்தால் தண்ணீரிலிருந்து நாய் எதையோ எடுப்பது போல் உள்ளது. வாயில் கவ்வியபடி எதையோ எடுத்து தரையில் போடுகிறது. அது என்னவென பார்த்தால் வெட்டுக்கிளி. ஆம், பறந்து கொண்டிருந்த வெட்டுக்கிளி நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது.

காப்பாற்றிய நாய்
இதை கண்ட நாய் ஓடி வந்து அதை காப்பாற்றியுள்ளது. வெட்டுக்கிளியை தரையில் போட்டுவிட்டு நாய் நடையை கட்டிய போது உடனே நின்று அந்த வெட்டுக்கிளி உயிருடன் இருக்கிறதா என உறுதி செய்து கொண்டு செல்கிறது. இது மிகவும் பாராட்டுதலுக்குரிய வீடியோ. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நாயை வெகுவாக பாராட்டி வருகிறார்.

தலைவணங்குதல்
நாய்கள் மனிதர்களை காட்டிலும் இரக்க குணம் கொண்டவைகள் என ஒரு வலைஞர் கூறுகிறார். நாய்கள் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசு என்கிறார் ஒருவர். இன்னொருவர் எனக்கு அந்த நாய் வேண்டும் என கேட்கிறார். நாய்க்கு தலைவணங்குகிறோம் என்கிறார் இன்னொரு வலைஞர்.
Grasshopper saved from drowning. pic.twitter.com/tUUEb8fsUR
— Earth's Beauty (@PhysicsAndAstr1) August 26, 2020
முயற்சி
நேற்றைய தினம் ஒரு வீடியோ வைரலானது. இதே நாய் குறித்த வீடியோதான் அது. ஒரு குட்டி குரங்கு விளையாடி கொண்டிருந்த போது கீழே கிடந்த ஒரு பெரிய மரக்கட்டையில் இருந்த ஒரு துளையில் விழுந்து அதன் உடல் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து வெளியேற குரங்கு எவ்வளவோ முயற்சித்தும் அது முடியவில்லை.

குட்டி குரங்கு
இறுதியாக ஒரு நாய் வந்து அந்த குட்டி குரங்கின் தலையை கவ்வியபடி அதை வெளியே எடுக்கிறது. இந்த வீடியோ வைரலானது. ஆனால் இந்த வீடியோவை எடுத்தவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற நாய்க்கு இருந்த எண்ணம் கூட இந்த மனிதனுக்கு இல்லாமல் வீடியோ எடுத்திருக்கிறாரே என சமூகவலைதளமே பொங்கியது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications