ஊரடங்கே முடியவில்லை.. அதற்குள் அதிரடி.. மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கம்
டெல்லி: இந்தியாவில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கும் என்று மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. அப்படி இருந்தும் திடீரென ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு, முன்பாகவே, அதாவது, மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அனைவரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
படிப்படியாக விமான போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் பயணிகள் மத்தியில் இதற்கு எந்தவிதமான எந்த மாதிரி வரவேற்பு கிடைக்கும் என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

ஏனெனில், பெங்களூர், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பஸ் போக்குவரத்து துவங்கிய போதிலும், போதிய அளவுக்கு பயணிகள் வருகை தரவில்லை. அப்படி இருக்கும்போது குளிர்சாதன வசதி கொண்ட விமானங்களை மக்கள் நாடுவார்களா, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications