கடைசியில் நடந்த மாற்றம்.. மாற்றப்பட்ட கார்.. விகாஸ் என்கவுண்டருக்கு முன் நடந்த ஷாக் சம்பவம்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாதா விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன் அவர் சென்று கொண்டு இருந்த கார் மாற்றப்பட்டது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசத்தை பதற வைத்த ரவுடி விகாஸ் துபே இன்று என்கவுண்டர் செய்யப்பட்டார்.உத்தர பிரதேசத்தில் கான்பூரில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தார்.

ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.மத்திய பிரதேசத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேசம் நோக்கி இவரை அழைத்து வந்த போது போலீசார் இவரை என்கவுண்டர் செய்துள்ளனர்.

எப்படி

எப்படி

விகாஸ் துபே இன்று கான்பூர் நோக்கி வரும் போதுதான் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூர் நோக்கி வரும் போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவர் வந்த TUV வகை கார் கீழே விபத்தில் விழுந்துள்ளது. அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விகாஸ் துபே தப்பித்து ஓட முயன்று இருக்கிறார். அதுவும் போலீசின் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு தப்பித்து ஓட முயன்று இருக்கிறார்.

முழு பின்னணி

முழு பின்னணி

அப்போது போலீசார் அவரை துரத்தி சென்று உள்ளனர். சரண்டர் ஆகும் படி போலீஸ் அவரை கேட்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியை காட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் தற்காப்பிற்காக அவரை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த என்கவுண்டர் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

கார்

கார்

இந்த நிலையில் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன் அவர் சென்று கொண்டு இருந்த கார் மாற்றப்பட்டது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதாவது துபே முதலில் கான்பூர் வரை எஸ்யுவி வகை கார் ஒன்றில் வந்து இருக்கிறார். உயர் ரக கார் ஒன்றில் பாதுகாப்பாக அவர் வந்துள்ளார். கான்பூர் உள்ளே நுழைய இருக்கும் செக் போஸ்ட், டோல் கேட் அனைத்தையும் இந்த கார் கிராஸ் செய்துள்ளது.

மாற்றப்பட்ட கார்

மாற்றப்பட்ட கார்

இந்த கார் டோல் கேட்டை கிராஸ் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ கூட வெளியாகி உள்ளது. காரில் அவர் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் எப்போது வேறு காருக்கு மாற்றப்பட்டார் என்று தெரியவில்லை . அதாவது எஸ்யுவி காரில் இவர் சென்ற நிலையில் TUV காருக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். விபத்து நடந்ததாக போலீசார் கூறும் கார் TUV வகை கார். ஆனால் விகாஸ் துபே சென்றது எஸ்யுவி வகை கார்.

சந்தேகம் என்ன

சந்தேகம் என்ன

இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன் விகாஸ் கார் மாற்றப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இவர் கார் மாற்றப்பட்டது என்றால் அது ஏன் மாற்றப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. போலீசார் இதற்கு என்ன விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+