வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தாத டிரம்ப்.. மது அருந்துபவர்களையும் பிடிக்காதாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே கிடையாது என்ற வியப்பான தகவல் வெளியாகியுள்ளது. புகைப்பிடிப்பதும் அவருக்கு பிடிக்காது.

Recommended Video

    Trump india visit|சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் டொனால்ட் டிரம்ப். அவரது உணவு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அங்குலம் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார்.

    மப்பின்கள்

    மப்பின்கள்

    பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்காதவர் டிரம்ப். அவர் டீ, காபி உள்ளிட்ட பானங்களையும் காலையில் அருந்த மாட்டாராம். சில நேரங்கள் மெக் டொனால்டின் மப்பின்களை உண்பது வழக்கம். பின்னர் முட்டைகளையும் உண்பாராம். வெண் பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட அமெரிக்க உணவில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கும்.

    உணவுகள்

    உணவுகள்

    இந்த உணவு புற்றுநோயை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. இவரால் 14 முதல் 16 மணி நேரம் வரை உண்ணாமல் இருக்க முடியும். மதிய உணவில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார். இதை பிரவுன் பிரட்டில் வைத்து சாப்பிடுவார். அதோடு அவருக்கு துரித உணவு கடைகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சியில் கிடைக்கும் உணவுகளும் மிகவும் பிடிக்கும்.

    12 கேன்கள்

    12 கேன்கள்

    இரவு நேரத்தில் இரு பெரிய மாக்ஸ், மீன் சான்ட்விச், சிறிய சாக்லேட் ஷேக் ஆகியவற்றை உண்வார். அதன் மொத்த கலோரி 2,430 ஆகும். தனது வெள்ளை மாளிகையில் மெக் டொனால்டை உருவாக்கியுள்ளார். டிரம்ப் பீட்சா பிரியர். அவருக்கு சிக்கன் உணவு பிடிக்காது. குளிர்பானங்களை பொருத்தமட்டில் டயட் கோக்கை தினமும் 12 கேன்கள் குடிப்பாராம்.

    புகைப்பிடிக்காதவர்

    புகைப்பிடிக்காதவர்

    மொறு மொறு ஸ்னாக்ஸ்தள் மிகவும் பிடிக்கும். உருளைகிழங்கு சிப்ஸை விரும்புவார். மது அருந்தும் பழக்கமில்லாதவர் டிரம்ப். வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே இல்லை. அது போல் புகைப்பிடித்தல், போதை வஸ்துகளையும் பயன்படுத்தாதவர். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்சினை ஏற்பட்ட போது குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியது கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+