என் கணவர் பெயரை எப்படி கூறலாம்? ஜெகதீப் தன்கரிடம் சண்டைக்கு போன அமிதாப் பச்சன் மனைவி! பரபர ராஜ்யசபா
டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் எம்பியான ஜெயா பச்சனை பார்த்து நடிகர் அமிதாப் பச்சனை மணந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் ஜெயா அமிதாப் பச்சன் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் அழைத்தார். இதனால் ஜெயா பச்சன் நேரடியாக ஜெகதீப் தன்கரிடம் சண்டைக்கு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ராஜ்யசபா களேபரமானது. இதையடுத்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று ராஜ்யசபா தொடங்கியது. துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் தலைமை வகிக்க ராஜ்யசபா எம்பிக்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.

நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனும் ராஜ்யசபாவுக்கு வந்திருந்தார். ஜெயாபச்சன், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
அப்போது தான் ஜெகதீப் தன்கர் கூறிய வார்த்தை கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது ராஜ்யசபா தலைவரான ஜெகதீப் தன்கர், ஜெயா அமிதாப் பச்சன் ‛‛ஜெயா பச்சனை பார்த்து சக நடிகரான அமிதாப் பச்சனை திருமணம் செய்தவர்’’ என்பதை குறிப்பிடும் வகையில் ‛ஜெயா அமிதாப் பச்சன்’ எனக்கூறி அழைத்தார். அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் ஆகியோர் கணவன் மனைவி தான் என்றாலும் கூட தனக்கு கணவரை வைத்து அடையாளம் காட்ட வேண்டாம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மீண்டும் 2வது முறையாக ஜெகதீப் தன்கர் இப்படி கூறியதால் ஜெயா பச்சன் கடும் கோபமடைந்தார்.
இந்த வேளையில் அவர் ஜெகதீப் தன்கரிடம் சண்டைக்கு போனார். அப்போது, ‛‛நான் ஜெயா அமிதாப் பச்சன் என்று கூறியதன் தொனி எனக்கு பிடிக்கவில்லை. நான் கலைஞர். ஒவ்வொருவரின் உடல் அசைவையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். மன்னிப்புடன் ஒன்றை கூறி கொள்கிறேன். உங்களின் தொனி ஏற்புடையதாக இல்லை. நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்களின் தொனியை ஏற்க முடியாது'' என்று சண்டைக்கு போனார்.
இதனால் டென்ஷனான ஜெகதீப் தன்கர், ‛‛ஜெயா ஜி உங்கள் இருக்கையில் இருங்கள். நீங்கள் பெரியளவில் நற்பெயரை சம்பாதித்துள்ளீர்கள். ஒரு நடிகர் என்பவர் இயக்குனருக்கு உட்பட்டவர். நான் இங்கிருந்து பார்ப்பதை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம், ஆனால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
பதுங்கும் பாஜக.. வக்பு வாரிய மசோதாவை ராஜ்யசபாவில் கொண்டுவர தயங்கும் மத்திய அரசு.. கணக்கு இடிக்குதே
இதற்கு ஜெயா பச்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்பிக்கள் ஜெகதீப் தன்கரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் ராஜ்யசபா களேபரமானது. இதையடுத்து ஜெயா பச்சனுக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
இதுபற்றி ஜெயா பச்சன் கூறுகையில், ‛‛இது ஒரு அவமானகரமான நிகழ்வு. ராஜ்யசபா தலைவர் நாற்காலியில் இருந்து என்ன சொன்னாலும் அனுமதிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாங்கள் ஒன்றும் பள்ளி குழந்தைகள் இல்லை. எங்களின் வாரிசுகள் வயது வந்தவர்களாக உள்ளன. இதனால் தான் நான் வருத்தப்பட்டேன். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே) பேச எழுந்தபோது அவர் (தலைவர்) மைக்கை அணைத்துவிட்டார்.
மேலும், ஒவ்வொரு முறையும் அன் பார்லிமென்டரி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பிரபலமாக இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவர் எதற்காக கவலைப்பட வேண்டும். பெண்களை நோக்கி அவர் ஏன் அத்தகைய வார்த்தைகளை அவர் உதிர்க்க வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‛‛நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர். பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது’’ என்று குற்றம்சாட்டினார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியின் எம்பியான பிரியங்கா சதுர்வேதி, ‛‛நாடாளுமன்றத்தில் ஜெகதீப் தன்கரை விட அதிக அனுபவம் ஜெயா பச்சனுக்கு உள்ளது’’ என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications