Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதுங்கி பாய ரெடியாகும் பாஜக.. வக்பு வாரிய மசோதாவை கிடப்பில் போட்ட பின்னணி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நடப்பு கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யாமல் மத்திய அரசு பதுங்க உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

1947 ல் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. இந்த வேளையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். இவர்களின் நிலம், சொத்துகளை நிர்வகிக்க வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1955ல் அமலுக்கு வந்தது. தற்போது நாடு முழுவதும் வக்பு வாரியங்களுக்கு ஏராளமான சொத்துகள் இருந்து வருகின்றன.

Waqf bill waqf bill amendment Rajya Sabha Parliament

கடந்த 2022ம் நிலவரப்படி நாடு முழுவதும் வக்பு வாரியங்களுக்கு 7.80 லட்சத்துக்கும் அதிகமான அசையா சொத்துகள் உள்ளன. தற்போது 9.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி ஆகும். இந்த வக்பு வாரிய சட்டத்தில் தொடர்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வுருகின்றன. இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்துள்ளது.

அதன்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வாரிய சொத்துகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வக்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதுதவிர வக்பு வாரியத்தின் அதிகாரம் என்பது சுருக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட நிலம் என்பது வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்று உண்மை தன்மையை சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மூலம் வக்பு வாரிய நிலங்களை பாஜக பறிக்க முயற்சிக்கிறது என ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சிகளின் இந்த ஆட்சேபத்தால் நேற்று கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு லோக்சபாவில் இப்படியான சூழல் உள்ள நிலையில் ராஜ்யசபாவிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது பாஜக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மசோதா நிறைவேற்ற தேவையான எம்பிக்கள் பாஜகவுக்கு இல்லாதது தான். இதனால் பாஜக மாற்று திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி வரை நடைபெறும் நிலையில் ராஜ்யசபாவில் வக்பு வரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யாமல் வரும் நவம்பர் - டிசம்பர் மாதம் நடக்கும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை காத்திருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் நவம்பர், டிசம்பர் மாதத்துக்குள் பல மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவுக்கு கூடுதல் எம்பிக்கள் கிடைப்பார்கள். அதாவது செப்டம்பர் மாதம் 3ம் தேதி 12 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மூலம் பாஜக கூட்டணிக்கு அதிக எம்பிக்கள் கிடைக்க உள்ளனர். அதேபோல் ராஜ்யசபாவில் நியமன எம்பிக்களுக்கான 4 இடம் கடந்த மாதத்துடன் காலியானது. இந்த இடமும் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதனால் பாஜக ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கப்படும்.

மேலும் 4 நியமன எம்பிக்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் பாஜகவுடன் தற்போது மோதல் போக்கை கடைப்பிடிக்கும் அதிமுகவின் 4 எம்பிக்களின் ஆதரவு கூட பாஜகவுக்கு வேண்டாம். இதனால் அப்போது எதிர்ப்பு இன்றி ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று பாஜக நினைக்கிறது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டில் ராஜ்யசபாவில் அதிகபட்ச எம்பிக்களின் எண்ணிக்கை 250 என்ற அளவில் இருக்கலாம். இதில் 238 பேர் கட்சி எம்எல்ஏக்கள் மூலம் தேர்வானவர்களாகவும், 12 பேர் ஜனாதிபதி மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்களாகவும் இருப்பார்கள்.

இன்றைய நாளின்படி பார்த்தால் ராஜ்யசபாவில் 237 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. 13 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் 237 எம்பிக்களின் அடிப்படையில் பார்த்தலால் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்ற 119 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் தற்போது பாஜக கூட்டணிக்கு அவ்வளவு எம்பிக்கள் இல்லை. மாறாக பாஜகவுக்கு 87 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பாஜக கூட்டணி கட்சியினருக்கு 23 எம்பிக்கள் உள்ளனர். இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 110 எம்பிக்கள் தான் உள்ளனர். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 119 எம்பிக்களில் 9 பேர் குறைவாக உள்ளனர்.

இதனால் ராஜ்யசபாவில் இப்போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற வாய்ப்பு இல்லை. மாறாக நவம்பர், டிசம்பர் மாதத்தில் இந்த மசோதாவை பாஜகவால் எளிதாக நிறைவேற்ற முடியும். ஏனென்றால் செப்டம்பர் மாதம் 12 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, திரிபுரா, அசாம், பீகார், மகாராஷ்டிராவில் இருந்து பாஜகவுக்கு கூடுதல் எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன்மூலம் பாஜகவின் எம்பிக்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கும். அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கும், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்பிக்கள் கிடைக்கும். இதனால் ராஜ்யசபாவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான சீட்டுகள் எளிமையாக கிடைக்கும். எனவே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இந்த ஆண்டு இறுதியில் ராஜ்யசபாவில் நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+