17 கோடியில் புக் ஆன அரண்மனை.. வருங்கால கணவனுடன் மலை உச்சிக்கு போன பெண்.. நொடியில் தலைகீழான வாழ்க்கை
சென்னை: மகாராஷ்டிராவின் லோஹாகாட் கோட்டைப் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், நாடு முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது. தங்கள் மகளின் ஆடம்பரமான திருமணத்திற்காக ஒட்டுமொத்த உறவுகளும் எதிர்பார்த்து காத்திருக்கையில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், சம்பவப் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அப்படியென்ன நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
அந்த இளம்பெண்ணின் பெயர் சியா கோயல். இவருக்கு கேதன் அகர்வால் என்பவருடன் திருமணம் செய்ய 2 வீட்டு குடும்பத்தினரும் சம்மதித்து, அதற்கான ஏற்பாடுகளையும் மிகப்பிரம்மாண்டமாக செய்து வந்தனர்.

17 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை
இவர்கள் தங்களது திருமணத்திற்காக சுமார் 17 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையை புக்கிங் செய்திருந்தனர். இதற்காக, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர்.
கல்யாண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தபோதுதான், திடீரென கேதன் அகர்வால் மாயமானார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கேதன் அகர்வாலைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினார்கள். அப்போதுதான் லோஹாகாட் கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு செங்குத்தான மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வருங்கால கணவர்
அது காணாமல் போன கேதன் அகர்வாலின் சடலம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆரம்பத்தில் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்றுதான் போலீசார் நினைத்தனர். எனினும் போலீசார் கேதன் அகர்வாலின் செல்போன் விபரங்களை ஆராய்ந்தனர். அவர் கடைசியாக யாருடன் பேசினார், எங்கெங்கே சென்றார் போன்ற விபரங்களைச் சேகரித்தனர். அப்போதுதான், கேதன் அகர்வால் காணாமல்போன தினத்தன்று, வருங்கால மனைவி சியா கோயலுடன் வெளியில் சென்றது, செல்போன் டவர் இருப்பிடங்கள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து சியா கோயலை போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
மலை உச்சியில் கொடுமை
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சியா கோயல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சியா கோயலுக்கு கேதன் அகர்வாலைத் திருமணம் செய்து கொள்வதில் முழு விருப்பம் இல்லையாம். தன் காதலனான சேதன் சௌத்ரியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, கேதன் அகர்வாலை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்துள்ளார்.
அத்துடன் கேதன் அகர்வாலை கொன்றுவிடுவது என்றும் முடிவு செய்துள்ளார். இதற்காக தனியாக பேச வேண்டும், லோஹாகாட் கோட்டைப் பகுதிக்கு வருமாறு கேதன் அகர்வாலை சியா கோயல் அழைத்தார். அதன்படியே கேதன் அகர்வாலும் அங்கு சென்றுள்ளார்.
17 கோடி அரண்மனை மண்டபம்
இருவரும் இயற்கை அழகை ரசித்தபடி மலையின் விளிம்பிற்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது சியா கோயல் திடீரென கேதன் அகர்வாலை பின்னால் இருந்து பலமாகத் தள்ளியுள்ளார். செங்குத்தான அந்த மலையிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கேதன் அகர்வால், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலைக்கு சியா கோயலின் காதலனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் 2 பேருமே கைதாகி ஜெயிலுக்குள் இருக்கிறார்கள்.
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, அரண்மனையில் கோலாகலமாக நடக்கவிருந்த ஒரு திருமணம், இப்படி ஒரு கொலைச் சம்பவத்தில் முடிந்திருப்பது 2 குடும்பத்தினரையும், பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications