ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் என்றால் என்ன? சென்னையில் யாருக்கெல்லாம் இந்த மீட்டர் பொருத்தப்படும்?
சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் முறையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், சென்னை குடிநீர் வாரியம் ஒரு சூப்பரான திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது... அதன்படி, நகரின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள, அதிக அளவில் குடிநீரைப் பயன்படுத்தக்கூடிய ஒரு லட்சம் கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!
சென்னை மக்களின் குடிநீர் தேவையை சீரமைக்கவும், தண்ணீர் வீணாவதை துல்லியமாக கண்காணிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளதுதான் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.. இந்த திட்டத்துக்காக தமிழக அரசு சுமார் 273.60 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

அதிநவீன ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள்
இந்த அதிநவீன ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை பொருத்தி, அவற்றை முழுமையாக இயக்குவதற்காக "ஜே.டபிள்யூ.ஐ.எல். இன்ப்ரோ லிமிடெட்" என்ற முன்னணி ஒப்பந்த நிறுவனம் தனியாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் இப்போது அதிரடியாக களமிறங்கி உள்ளதாம்.. அதுவும் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில்...!!
சென்னை மக்கள் எந்தெந்த நேரங்களில் குடிநீரை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், அவர்களின் இப்போதைய நீரின் பயன்பாட்டு அளவு என்ன, மற்றும் அதற்கான கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாம்..
அதுமட்டுமல்ல, இந்த ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் உண்மையான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, பொதுமக்களின் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
பொதுமக்கள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து, யாரும் பயமோ, குழப்பமோ அடையாமல் இருக்க, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே மக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தும் நேரத்தை மிகத் துல்லியமாக கண்காணிப்பதற்கும், ஒட்டுமொத்த நகரின் நீர் பயன்பாட்டை சீரமைத்து சமமாக விநியோகிப்பதற்கும் சென்னை குடிநீர் வாரியம் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாம்..
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள்
இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை நகரின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சுமார் 2,500 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கட்டிடங்களும் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மீட்டர்களில் ஐ.ஓ.டி. அதாவது Internet of Things எனப்படும் நவீன ஆன்லைன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இனிமேல் குடிநீர் வாரிய ஊழியர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கோ அல்லது கட்டிடங்களுக்கோ நேரில் வந்து மீட்டரைப் பார்த்து ரீடிங் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு மாதமும் தானியங்கி முறையில் இந்த மீட்டர்கள் மூலமாகவே நீர் நுகர்வு அளவு கணக்கிடப்பட்டு, கம்ப்யூட்டர் மூலமாக துல்லியமான கட்டண விவரங்கள் உருவாக்கப்பட்டு கஸ்டமர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பெரிய பெரிய கட்டிடங்கள்
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை முழுவதும் மொத்தம் 73 ஆயிரத்து 608 கட்டிடங்கள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காகத் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முதல்கட்ட லிஸ்ட்டில் 47043 தனிப்பட்ட பெரிய குடியிருப்பு கட்டிடங்களும், 26886 கமர்ஷியல் கட்டிடங்கள் அதாவது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், அலுவலகங்கள் போன்றவை அனைத்தும் உள்ளடக்கமாகும்.
இந்த முதற்கட்டப் பணிகள் முடிந்ததுமே, மற்ற கட்டிடங்களுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் சென்னை மாநகரில் குடிநீர் திருட்டு, நீர் வீணாதல் போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அனைவருக்கும் முறையான குடிநீர் விநியோகம் சாத்தியமாகும் என சென்னை குடிநீர் வாரியம் நம்புகிறது...!!!!












Click it and Unblock the Notifications