முதல்வர் விஜய் உதயநிதிக்கு ஸ்பேஸ் கொடுத்தார்.. சைலண்டாக கவனித்தது இதற்குத்தான்.. இப்போ தெரியுதா? நடிகர் ஷாம் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பேசிய விதம் அரசியல் வட்டாரத்தை மட்டும் அல்ல, சோசியல் மீடியாவையே குலுக்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக "முதல்வர் விஜய் ஏன் சட்டசபையில் அமைதியாக இருக்கிறார்?", "எதிர்க்கட்சிக்கு பதில் சொல்ல முடியாதா?", "பேசத் தெரியாததால் மவுனமாக இருக்கிறாரா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்த நிலையில், இன்று அந்த மொத்த விமர்சனங்களுக்கும் ஒரே நாளில் பதிலடி கொடுத்துவிட்டார் விஜய். திமுகவை நேரடியாக தாக்கிய பேச்சு, பஞ்ச் டயலாக்குகள், குட்டிக்கதை, அதற்குப் பிறகு ஏற்பட்ட வெளிநடப்பு - எல்லாம் சேர்ந்து சட்டசபை காட்சியை வைரலாக்கியிருக்கிறது.

நடிகர் ஷாம் கருத்து

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் நடிகர் ஷாம் முன்பு பேசிய ஒரு கருத்து மீண்டும் சோசியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "சிஎம் விஜய் சட்டசபையில் அமைதியாக இருந்ததற்கு காரணம் அவர் பேசத் தெரியாததால் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஸ்பேஸ் கொடுக்கத்தான். விஜய்க்கு இதை முடிக்க இரண்டு நிமிஷம் போதும்" என்று கூறியிருப்பது தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. இன்று விஜய் சட்டசபையில் பேசிய பிறகு, ஷாம் சொன்ன அந்த வரிகள் ரசிகர்கள் மத்தியில் "இதுதான் விஜயை சரியாகப் புரிந்தவரின் பேச்சு" என்று ட்ரெண்டாகி வருகிறது.

ஷாம் பேசியதன்படி, விஜயின் இயல்பே அமைதிதான். உடனடியாக பதில் சொல்லாமல், சுற்றி நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு, பொறுமையாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பவர் அவர் என்பதுதான் அவரது விளக்கம்.

Vijay Shaam Udhayanidhi Stalin

விஜய் பற்றிய விமர்சனம்

"ஆரம்பத்தில் அவன் பேச வேண்டாம், அவன் வாயைத் திறந்தால் என்னென்னமோ பேசுவான், அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். இப்போது அவர் அமைதியாக இருக்கிறார் என்று அதையே விமர்சிக்கிறார்கள்" என்று ஷாம் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக சட்டசபை குறித்து எதிர்க்கட்சியும், சோசியல் மீடியாவும் தொடர்ந்து ஒரே கேள்வியை எழுப்பி வந்தன - "முதல்வர் விஜய் எப்போது பேசப் போகிறார்?" என்பது தான் அது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் "சோஃபா மாடல் ஆட்சி", "முதல்வர் பேசவே மாட்டாரா?" போன்ற விமர்சனங்கள் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வந்தன.

சட்டசபையில் நடந்த சம்பவம்

இதற்கிடையே விஜய் சட்டசபையில் பெரும்பாலும் அமைதியாக இருந்தது மேலும் பேசுபொருளானது. சிலர் அதை "அரசியல் அனுபவமின்மை" என்று சொன்னார்கள். சிலர் "விஜயால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை" என்றும் விமர்சித்தனர்.

அதே நேரத்தில், நேற்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இதே விவகாரத்தில் மகனை ஆதரித்து பேசியிருந்தார். "விஜய் அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை" என்ற கோணத்தில் அவர் பதில் அளித்திருந்த நிலையில், இன்று சட்டசபையில் விஜய் திடீரென அதிரடியாக பேசியது ரசிகர்களிடம் வேறு மாதிரியான கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.

Vijay Shaam Udhayanidhi Stalin

சட்டசபையில் விஜய் பேச்சு

"நேற்று அப்பா பதில் சொன்னார்... இன்று மகன் சட்டசபையிலேயே பதில் சொல்லிவிட்டார்" என்ற வரிகளுடன் பலரும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இன்று சட்டசபையில் பேசிய விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, எதிர்க்கட்சியை நேரடியாக தாக்கும் பாய்ண்டுகளையும் விட்டார். குறிப்பாக, கடந்த 40 நாட்களில் தன்னுடைய அரசு என்னென்ன செய்துள்ளது என்பதை பட்டியலிட்டுப் பேசியதும், எதிர்க்கட்சியை நோக்கி "நாங்கள் என்ன செய்தோம்?" என்ற கேள்விக்கே பதில் அளித்த விதமும் TVK ஆதரவாளர்களிடையே பெரிதாக பேசப்படுகிறது.

60 வருஷமா பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க.. விஜய் ஏன் அமைதியா இருக்கிறார்?விமர்சனத்துக்கு SAC அதிரடி
இதற்கு மேல், அவர் பேசிய சில பஞ்ச் வரிகள், குட்டிக்கதை, அதற்குப் பிறகு ஏற்பட்ட திமுக வெளிநடப்பு - இவை எல்லாம் சேர்ந்து "அமைதியாக இருந்தவர் இன்று ஒரே நாளில் முழு பதிலையும் கொடுத்துவிட்டார்" என்ற நரேட்டிவை வலுப்படுத்தியுள்ளது.

Vijay Shaam Udhayanidhi Stalin

ரசிகர்கள் கருத்து

சோசியல் மீடியாவில் தற்போது ஓடும் முக்கியமான கருத்து இதுதான் - விஜய் இதுவரை அமைதியாக இருந்தது தன்னம்பிக்கை இல்லாததால் அல்ல; மாறாக, எல்லாவற்றையும் கவனித்து, எதிர்த்தரப்பை முழுமையாக பேசவிட்டு, சரியான நாளில் ஒரே அடியாக பதில் சொல்லவே அவர் காத்திருந்தார். இந்த கருத்தை ஷாம் முன்பே சொல்லியிருந்தார்; இன்று நடந்த சட்டசபை சம்பவம் அதையே உண்மையாக்கிவிட்டது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+