இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி. தினகரன் மேல்முறையீடு... உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டெல்லி: இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இந்த உத்தரவை கடந்த மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது .
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இருப்பினும் இரட்டை இலை சின்னத்துக்கு இரண்டு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

தேர்தல் ஆணையம்
இருதரப்பிடமும் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் - இபிஎஸ் அணிக்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலாவும் மேல்முறையீடு செய்தனர்.

மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி தீர்ப்பளித்தனர். அத்துடன் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

தேர்தல் ஆணையம் மறுப்பு
இதற்கிடையே, ஆர் கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் நின்று தினகரன் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், குக்கர் சின்னமும் இல்லாமல் இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால். இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications