வரதட்சணை சட்டம்.. பொய்ப்புகார் கொடுக்கும் பெண்கள்..வழக்கு போட்டவருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ருப்ஷி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய்ப்புகார் கொடுக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று, இந்த பிரச்சினைகளை எழுப்புங்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை, சொத்து போன்றவற்றை கேட்டுப்பெறுவது பல்வேறு சமூகங்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. என்ன தான் வரதட்சணை தடுப்பு சட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், இத்தனை பவுன் தங்கம், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், வீடு, வாகனம் என ஏதாவது வரதட்சணை கேட்பது நடக்கிறது. அதேநேரம் பெண் வீட்டில் நகை, பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர் செய்கிறார்கள் என்றாலும், கட்டாயப்படுத்தி கேட்பது அடிக்கடி நடக்கிறது.

மாமியார் மருமகள் சண்டைகளுக்கு வரதட்சணை முக்கிய காரணமாக இருக்கிறது. வரதட்சணைக்கு எதிராக சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொய்யான புகார் அளித்து கணவன் மற்றும் கணவன் குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பெண்களுக்கும் இந்த வரதட்சனை தடுப்பு சட்டம் உள்ளதாக பரவலாகவே குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்நிலையில் ருப்ஷி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "1961-ம் ஆண்டின் வரதட்சணை தடுப்பு சட்டம், 2005-ம் ஆண்டின் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக உள்ளன. ஆனால் அதே சட்டங்களை தவறாக பயன்படுத்தி, பெண்கள் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் அராஜகத்தால் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும்.
மேலும், மேற்கண்ட சட்டங்களில் உள்ள உட்பிரிவுகள், ஆண்களுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவையாகவும், நியாயமற்றவையாகவும் உள்ளன. குறிப்பாக, வரதட்சணை தடுப்பு சட்டத்தின் 2 மற்றும் 3-வது பிரிவுகள் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.அதேபோல் வரதட்சணை தடுப்பு சட்டம், மத அடிப்படையில் ஆண்களுக்கு பாரபட்சமாக உள்ளது. ஆகவே, இந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" இவ்வாறு ருப்ஷி சிங் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து, ''நீங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று, இந்த பிரச்சினைகளை எழுப்புங்கள்'' என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications