Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு.. பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்.. தமிழகத்திலும் உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஜனாதிபதியாக திரெளபதி முர்முவின் வெற்றியை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

    இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவு

    99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவு

    இவர்கள் 2 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்து ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. நாடாளுமன்றம், ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபைகளில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 4,033 எம்எல்ஏக்கள், 776 எம்பிக்கள் என மொத்தம் 4809 பேர் வாக்கு செலுத்த தகுதியாக இருந்தனர். மொத்தம் 99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதையடுத்து ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி எடுத்து செல்லப்பட்டன.

    திரெளபதி முர்மு முன்னிலை

    திரெளபதி முர்மு முன்னிலை

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லி நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் துவக்கம் முதலே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு தான் முன்னிலையில் இருந்தார். இன்று இரவு 8 மணிக்கு 3வது சுற்று ஓட்டு எண்ணிக்கை வெளியானது. இதிலும் யஷ்வந்த் சின்ஹா பின்தங்கினார்.

    ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு

    ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு

    இதில் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை திரெளபதி முர்மு கடந்தார். அவர் 2161 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்திருந்தன. இதன்மூலம் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகவும், யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகவும் இருந்தது. இதன்மூலம் திரெளபதி முர்முவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார்.

    துவங்கிய கொண்டாட்டம்

    துவங்கிய கொண்டாட்டம்

    இந்நிலையில் தான் திரெளபதி முர்முவின் வெற்றியை பாஜகவினர் கொண்டாட துவங்கி உள்ளனர். டெல்லியில் பாஜக சார்பில் மேள,தாளங்கள் முழங்க நடனக்கலைஞர்களுடன் திரெளபதி முர்முவின் கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர். மேலும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு இடங்களிலும் லட்டுகள், வேறு விதமான இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

    தமிழகத்திலும் கொண்டாட்டம்

    தமிழகத்திலும் கொண்டாட்டம்

    தமிழகத்திலும் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றியை கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெயராமன் முன்னாள் தலைவர் சிவா, தனகோடி, மகளிர் அணி பொது செயலாளர் அமுதா, மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி முருகம்மாள், சங்கர், ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+