முதல் சுற்றிலேயே பெரும் வித்தியாசம்... குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு முன்னிலை
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை
இதனை தொடர்ந்து இன்று வாக்கு சீட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கின. சுமார் ஒருமணியளவில் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.
Recommended Video

திரௌபதி முர்மு முன்னிலை
முதலில் எம்.பிக்களின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் திரௌபதி முர்மு 3,78,000 மதிப்பு கொண்ட 540 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, 1,45,600 மதிப்பு கொண்ட 208 வாக்குகளை பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாதது என்று தேர்தல் அதிகாரி பி.சி.மோடி தெரிவித்து உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications