Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை இனி தொட முடியாது.. இந்தியா களமிறக்கும் ராட்சசன்.. ட்ரோன்களை வானிலேயே அழிக்கும் லேசர் சிஸ்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் பெரிய அச்சுறுத்தல் ட்ரோன் தாக்குதல் தான். கண்ணுக்கு தெரியாமல் வந்து இலக்குகளை துல்லியமாக தாக்குவதில் ட்ரோன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ட்ரோன் தாக்குதல் என்பது உலக நாடுகளுக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது. நம் நாட்டுக்கும் ட்ரோன் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் இருந்து வருகிறது. ஆனால் இனி ட்ரோன் தாக்குதல் பற்றிய கவலை வேண்டாம். ஏனென்றால் நம் நாட்டை தாக்க வரும் ட்ரோன்களை வானிலேயே கண்டுப்பிடித்து அழிக்கும் லேசர் ஆயுத சோதனை வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த ஆயுதத்தை வைத்திருக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவின் பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது. இந்த லேசர் ஆயுதம்
என்பது என்ன? எப்படி வேலை செய்கிறது? எதிரிகளின் ட்ரோன்களை ஒரு வினாடியில் எப்படி அழிக்கும்? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

drone drdo laser system

இந்தியா.. நம் பெருமைக்குரிய நாடு.. வல்லரசுகளாக உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு நிகராக ஒவ்வொரு துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. அதேபோல் நாட்டின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஒருபக்கம் பாகிஸ்தான்.. இன்னொரு பக்கம் சீனா.. மற்றொரு பக்கம் வங்கதேசம்.. இப்படி அண்டை நாடுகள் நம்மிடம் தொடர்ந்து மோதி வருகின்றன. இந்த நாடுகளால் எல்லையில் அவ்வப்போது பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.

இதனை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பதற்றம் என்பது மோதலாக கூட உருமாறலாம். எனவே பாதுகாப்பு துறை என்பது நம் நாட்டுக்கு மிகவும் முக்கியம். ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளையும் வலிமையாகவும், சிறப்பான ஆயுதங்களுடன்
மேம்படுத்தி வருவதும் ரொம்ப முக்கியம்.

இதனை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், கடற்படைக்கான கப்பல், விமானப்படைக்கான அதிநவீன விமானங்களை தொடர்ந்து வாங்கி பாதுகாப்பு துறையை வளமாக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு அசத்தலான சம்பவத்தை செய்து வெற்றியும் கண்டுள்ளது நம் நாடு.

அதாவது முன்காலத்தில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் நுழைந்து எதிரிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்றால் போர் விமானங்களை தான் நம்பி இருக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும். போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அதற்கேன கைதேர்ந்த விமானி, எரிபொருள், விமானத்தின் பராமரிப்பு என்று பல பிரச்சனைகள் உள்ளது. அதோடு எதிரி நாடுகளின் எல்லைக்குள் அவர்களுக்கு தெரியாமல் நுழைந்து இலக்கை தாக்கிவிட்டு சொந்த நாட்டுக்குள் வருவது என்பது போர் விமானங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். அதாவது போர் விமானங்கள் மூலம் இன்னொரு நாட்டுக்குள் நுழைந்து தாக்குவதை அந்த நாடுகளில் எளிதில் கண்டுபிடித்துவிடும். இதனால் பதில் தாக்குதலில் விமானத்தை தாக்கி அழிக்கலாம். இதில் விமானிகளின் உயிர் கூட பறிபோகலாம். இது ரிஸ்க்கான விஷயம் என்றாலும் வேறு வழியின்றி போர் சூழலில் விமானங்களை பயன்படுத்தி தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதிரி நாடுகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். அதில் முக்கிய இடம் பிடித்து இருப்பது தான் ட்ரோன். இந்த ட்ரோனை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும். வெறும் ட்ரோனை மட்டும் எதிரி நாடுகளுக்கு அனுப்பினால் போதும். விமானிகள் போன்று எந்த மனிதர்களையும் அனுப்ப வேண்டியது இல்லை. இப்படி
அனுப்பபப்படும் ட்ரோன் மூலம் எதிரி நாடுகளுக்கு எளிதில் அடி கொடுக்கலாம். ட்ரோன்களை எடுத்து கொண்டால் இது உருவத்தில் சிறியது.

இதனால் எதிரி நாட்டு தடுப்பு கருவிகள் அவற்றை கண்டரிந்து, துல்லியமாக குண்டு வீசி அழிப்பதும் சற்று கடினம். இதனால் எதிரி நாடுகளால் ட்ரோன் மூலம் எளிதாக தாக்க முடியும். உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் முக்கிய ஆயுதமாக இந்த ட்ரோன்களை தான் பயன்படுத்தி வருகின்றன.
ட்ரோன்களை வைத்து இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. அதேபோல் இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புல்லா போரிலும் கூட ட்ரோன் அட்டாக் பெரிய அளவில் நடந்தது.

இந்த ட்ரோன்களுக்கு போர் விமானங்களை ஒப்பிடும்போது செலவு, பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவு குறைவு. ஒருவேளை எதிரி நாடுகள் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தினாலும் கூட ட்ரோன் மட்டுமே நஷ்டமாகும். உயிர் பலி என்பது இருக்காது. இதனால் தான் தற்போது அனைத்து நாடுகளும் ட்ரோன்களை குவிக்க தொடங்கி உள்ளன. இதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. அதேபோல் எதிரியாக உள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவும் ட்ரோன் டெக்னாலஜியை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.

இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. நம் நாடும் அதிநவீன ட்ரோன்களை வைத்திருந்தாலும் கூட பதிலடி தாக்குதலை மட்டும் தான் நடத்த முடியும். மாறாக எதிரி நாடுகளின் ட்ரோன்களை கண்டுபிடித்து அழிப்பதில் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலை போக்க தான் டிஆர்டிஓ எனும் நம் நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO or Defence Research and Development Organisation) முக்கிய ஆயுதத்தை கண்டுபிடித்து அசத்தி உள்ளது. அதோடு அந்த ஆயுதத்தை சோதனை செய்து வெற்றியும் பெற்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா வரிசையில் இடம்பெற்று உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது.

அதாவது நம் நாட்டை தாக்க வரும் ட்ரோனை கண்டுபிடித்து வானிலேயே அழிக்கும் லேசர் ஆயுதத்தை தான் தற்போது டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது. இந்த ஆயுதத்துக்கு MK -II (A)Laser-Directed Energy Weapon (DEW) system என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக இந்த ஆயுதத்தை MK II DEW என்று அழைக்கின்றனர். இதனை டிஆர்டிஓ, CHESS, LRDE, IRDE, DLRL உள்ளிட்டவை சேர்ந்து உருவாக்கி உள்ளன. இது 30 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஒளியை உமிழும். இந்த ஒளி வானில் பறக்கும் ட்ரோன் மீது விழுந்து சில வினாடியில் அழிக்கும். இந்த ஆயுதம் என்பது ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தேசிய ஓபன் ஏர் ரேஞ்ச் பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

அதாவது நீண்ட தூரங்களில் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்த லேசர் ஆயுதம் அட்டாக்கை தொடங்கியது. ட்ரோனை பார்த்ததும் இந்த ஆயுதத்தில் இருந்து மின்னல் வேகத்தில் சென்ற லேசர் ஒளி அந்த ட்ரோனை தாக்கி அழித்தது. இந்த தாக்குதல் என்பது மிகவும் துல்லியமாக இருந்தது. பிசிறு தட்டவே இல்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் இது முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை டிஆர்டிஓ தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் இது ஒரு லேசர் ட்ரோன் தடுப்பு சிஸ்டம். அதாவது

எதிரி நாட்டு ட்ரோன்கள் நம் எல்லைக்குள் ஊடுருவினால், மறுகணமே அதனை கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டது. அதாவது இந்த லேசர் ஆயுதத்தில் நவீன ரேடார் கருவி இருக்கும். இது நம் எல்லைக்குள் நுழையும் ட்ரோனை கண்டுபிடித்து சிக்னல் தரும். அதேபோல் எலக்ட்ரோ ஆப்டிக் (Electro Optic) அமைப்பு உள்ளது. லேசர் ஒளியை மின்னல் வேகத்தில் எதிரிகளின் ட்ரோனை நோக்கி அனுப்பும். லேசர் ஒளி அடுத்த சில வினாடியில் ட்ரோனை நோக்கி சென்று தாக்கி அழிக்கும். முதலில் ட்ரோனின் இறக்கையை அழிக்கும். அதன்பிறகு ட்ரோனில் இருக்கும் ஆன்டனா, ரோடாரை சிதைக்கும். இறுதியில் மொத்தமாக அந்த ட்ரோன் செயலிழந்து அழிந்து போகும்.

இந்த ட்ரோன் தடுப்பு சிஸ்டத்தை வைத்து ட்ரோன்களை மட்டும் இன்றி, நம்மை தாக்க வரும் சிறிய ரக ஏவுகணைகளை கூட அழிக்க முடியும். இதுதான் தற்போது அண்டை நாடுகளை அலற வைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் என்பது தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இதற்கு அடுத்ததாக இந்தியா தான் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இஸ்ரேல் இந்த ஆயுதத்தை தயாரிப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பிற நாடுகள் இந்தியாவை பார்த்து வியப்படைந்துள்ளன.

மேலும் பொதுவாக வானில் தாழ்வாக பறந்து வரும் ட்ரோன்களை நம்மால் சுட்டு வீழ்த்த முடியும். மாறாக உயரமாக பறந்து வரும் ட்ரோன்களை அழிப்பது சவாலான காரியமாகும். இதன் கதையை முடிக்க வேண்டும் என்றால் வெடிகுண்டு அல்லது வெடிப்பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும். ஆனால் இந்த லேசர் சிஸ்டம் என்பது தாழ்வாக மற்றும் உயரமாக பறக்கும் ட்ரோன்களை எளிதில் கண்டுபிடித்து எளிதாக அழிக்கும். இப்படியான ஆயுதத்தை நம் பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ தயாரித்து வெற்றி பெற்றிருப்பது நம் நாட்டை பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யம் என்பதில் ஐயமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+