இன்று முதல் புதிய ரூல்ஸ்.. டிரைவிங் லைசென்ஸ்.. வங்கி கணக்கு.. கட்டாயம் கவனிக்க வேண்டியது என்னென்ன?
டெல்லி: மாதத்தின் முதல் நாளான இன்று பல்வேறு புதிய முறைகள் நடைமுறைக்கு வருகின்றன. டிரைவிங் லைசன்ஸ் முதல் கிரெடிட் கார்டு வரை இன்று நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அரசு துறைகள் மற்றும் வங்கிகள் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்துகின்றன. மாத தொடக்க நாளில் பல விதிமுறைகள் மாறும். அந்த வகையில் வருகிற ஜூன் மாத தொடக்க நாளான இன்று சில முக்கிய விதிகள் மாறுகின்றன.

டிரைவிங் லைசன்ஸ் முதல் ஆதார் கார்டு வரை, இன்று பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களை கவனித்து அதற்கேற்ப செயல்படாவிட்டால் நமக்கு தேவையற்ற சிக்கலும், பண இழப்பும் ஏற்படும். எனவே, இந்த மாற்றங்கள் குறித்து அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியான இன்று முதல் என்னென்ன மாற்றங்கள்? வாங்க பார்க்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ்: இன்று முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதியான இன்று முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓவிடம் நேரடியாகச் செல்லத் தேவையில்லை. டிரைவிங் ஸ்கூலில் இருந்தும் டிஎல் தயாரித்துக் கொள்ளலாம், புதிய விதியின்படி ஆர்டிஓவிடம் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் இருந்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
மைனர்களுக்கு அபராதம்: ஜூன் 1 ஆம் தேதியான இன்று முதல் 18 வயதுக்குட்பட்ட வாகனம் ஓட்டும் மைனர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால் 25,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு 25 வயது நிறைவடையும் வரை லைசென்ஸ் வழங்கப்படாது. கூடுதலாக வாகன உரிமையாளர் ஆர்சி புத்தகம் ரத்து செய்யப்படும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை: ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வது குறித்த தகவலை UIDAI அளித்துள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14 வரை மட்டுமே உள்ளது. ஜூன் 14 ஆம் தேதி வரை எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் விவரங்களை எளிதாக புதுப்பிக்கலாம். இந்த சலுகை ஆன்லைனில் மட்டுமே. ஆஃப்லைனில் ஆதார் அட்டையை அப்டேட் செய்தால், அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு புதிய விதிகள்: இன்று முதல் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு விதிகள் மாறுகின்றன. ஜூன் 1 முதல் முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் பொருந்தாது என்று எஸ்பிஐ கார்டு கூறியுள்ளது. இந்த வசதி நிறுத்தப்படும் SBI கிரெடிட் கார்டுகளில் Aurum, SBI Card Elite, SBI Card Elite Advantage மற்றும் பல உள்ளன.
வங்கி கணக்குகள் மூடல்: நீங்கள் பேங்க் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்த பிறகு அந்த கணக்கை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக (ஏப்ரல் 30 2024ஆம் ஆண்டு வரை) பயன்படுத்தாமல் வைத்திருந்தாலோ, 0 பேலன்ஸ் இருந்தாலோ அல்லது நோ பேலன்ஸ் கொண்ட கணக்குகள் இன்று முதல் மூடப்பட இருக்கின்றன. உடனடியாக KYC ஆவணங்களை அப்டேட் செய்துவிட்டால், அவர்களது அக்கவுண்ட்கள் மூடப்படுவதில் இருந்து தப்பிக்கும். இதற்கான விதிமுறைகள் வங்கிகளால் வெளியிடப்பட்டு உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை: வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைந்து,1,840.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆதார் பான் கார்டு: பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை 31 மே 2024க்குள் இணைப்பது கட்டாயம். வருமான வரித் துறை, வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் 31 மே 2024க்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டது. நேற்றைக்குள் ஆதார் உடன் பான் கார்டை இணைக்காதவர்கள் அதிக டிடிஎஸ் (TDS) செலுத்த வேண்டி இருக்கும்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications