Ironing shop owner get more income: தம்பி ஓரமா போய் விளையாடுப்பா.. ஐடி ஊழியர்களின் சம்பளத்தை முந்திய இஸ்திரி தொழிலாளர்
டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் படிப்பை முடித்து (Dry clean shop owner gets more income) கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை, குறைவான சம்பளம், ஆட் குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றால் பணியாளர்கள் அதிக அழுத்தத்தில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் வேலையைவிட கை தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
புரோட்டோ மாஸ்டர், டீ மாஸ்டர், கறிக்கடைகளில் பணியாற்ற அதிக சம்பளத்துடன் போடப்பட்ட விளம்பரங்களை பார்த்து ஆச்சர்யமடைந்திருப்போம். அந்த வகையில் ஐடி வருமானத்தை ஓவர்டேக் செய்யுமளவுக்கு இஸ்திரி தொழிலில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிப்பவர்கள் பற்றிய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

ரூ.2 லட்சம் சம்பாதிப்போம்
நளினி உனாகர் என்பவர் தன் எக்ஸ் பக்கத்தில், "என் வீட்டருகே உள்ள டிரை கிளீனிங் கடை உரிமையாளரிடம் நேற்று பேசினேன். நான் அங்கு தொடர்ச்சியாக செல்வேன். அவரும், அவர் மனைவியும் இணைந்து பணியாற்றுவார்கள். மேலும் ஊதியத்திற்காக 2 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தாங்கள் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிப்போம் என்று கூறியதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இஸ்திரியில் பலே வருமானம்
இந்தியாவில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள ஷாப்ட்வேர் இன்ஜினியரின் சம்பளம் இது. அந்தக் கடையில் அவர்கள் தினசரி 350 துணிகளுக்கு இஸ்திரி போடுகிறார்கள். ஒரு துணிக்கு சராசரியாக ரூ.10 என்று கணக்கிட்டால் அதில் மட்டுமே ஒரு நாளுக்கு ரூ.3,500 கிடைக்கும். சூட், சோலி, ப்ரீமியம் சேலைகள் போன்ற கடினமான 20 துணிகள் தினசரி டிரை கிளீனிங்கிற்கு வருகிறது. இதில் ஒரு துணிக்கு ரூ.350 வீதம் ரூ.7,000 கிடைக்கும். இது தினசரி வருமானம்.
மாதம் 3 நாட்கள் தான் விடுமுறை எடுக்கிறார்கள். மாதம் 27 நாட்கள் பணியாற்றினால் ஒரு நாளுக்கு ரூ.10,500 வீதம் மாதம் ரூ.2,83,000 சம்பாதிப்பார்கள். அது அவர்களின் சொந்தக் கடை என்பதால் வாடகை இல்லை. மின்சார கட்டணம் ரூ.6,000 செலுத்துகிறார்கள். ஊழியர்கள் இருவருக்கு மாதம் ரூ.20,000 வீதம் ரூ.40,000 சம்பளம் கொடுக்கிறார்கள்.
2 லட்சம் லாபம்
எல்லா செலவுகள் போக மாதம் ரூ.2,37,500 லாபம் எடுக்கிறார்கள். இது கடந்த மாதத்திற்கான நிலவரம் என்று கூறினார்கள். ஆனால் சராசரியாக அனைத்து மாதங்களிலும் ரூ.2 லட்சத்திற்கும் குறைவில்லாமல் கிடைக்கும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நேர்மறை, எதிர்மறை 2 விதங்களிலும் கமென்ட்கள் வருகின்றன.
நெட்டிசன்கள் பதிவு
சில நெட்டிசன்கள், "இதன் மூலம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு டிரை கிளீன் கடை அமைத்து இஸ்திரி போட்டால் நிறைய சம்பாதிக்கலாமே" என்று கூறி வருகிறார்கள். மறுபக்கம் சில நெட்டிசன்கள், "இந்தப் பதிவு தவறானது. எங்களுக்கு தெரிந்த டிரை கிளீன் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது, தண்ணீர் மற்றும் ரசாயனங்களின் விலை உயர்ந்துவிட்டது. செலவுகள் போக மாதம் ரூ.60,000 வருமானம் கிடைத்தால் அதிகம் என்கின்றனர்" என்று கூறியுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications