புர்ஜ் கஃலீபாவில் மோடியின் முகம்.. வண்ணமாக ஜொலித்த உலகின் உயரமான கட்டடம்.. பிறந்தநாளுக்கு ‛கிப்ட்’
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல வெளிநாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவரது போட்டோ உலகின் மிகவும் உயர்ந்த கட்டமான துபாயில் உள்ள புர்ஜ் கஃலீபாவில் வெளியிடப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல வெளிநாட்டு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்தும், வீடியோ வெளியிட்டும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதவிர பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‛மா வந்தே' (Maa Vande) என்ற பெயரில் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், மோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நேற்று இரவு அவரது போட்டோ உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கஃலீபாவில் வெளியிடப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த செயல் என்பது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.
#WATCH | Dubai's Burj Khalifa illuminated tonight with the images of PM Narendra Modi, on the occasion of his 75th birthday. pic.twitter.com/gamw6cRaoq
— ANI (@ANI) September 17, 2025
புர்ஜ் கஃலீபா என்பது துபாயின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயரமான கட்டடாகும். இந்த புர்ஜ் கஃலீபா கட்டத்தின் உயரம் 829.8 மீட்டராகும். அதாவது 2,722 அடி. இது ஒரு அரை மைல் தொலைவாகும். இந்த கட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கட்டத்தை சுற்றி வெளிப்புறத்தில் கண்ணாடி சுவர் உள்ளது. இதில் தான் வண்ண விளக்குகள் உதவியுடன் தலைவர்களின் பெயர்கள், போட்டோக்கள் ஒளிர செய்யப்படும்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான், பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‛‛நரேந்திர மோடிக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பான வளர்ச்சிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகள்'' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications