மேகதாது விவகாரத்தில் எங்களுக்கு மந்தமும் இல்லை.. மாந்தமும் இல்லை.. அமைச்சர் துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மந்தமாகவும் இல்லை , மாந்தமாகவும் இல்லை என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தின் நீர் வள பிரச்சினைகள் குறித்து டெல்லியில் ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார் துரைமுருகன்.

இதையடுத்து அவர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

நல்லா பழகினாரு

நல்லா பழகினாரு

அவர் மிகவும் நன்றாக பழகினார். நாங்கள் கொண்டு சென்ற பிரச்சினைகள் குறித்து அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. காவிரி ஆற்றின் நீர் பகிர்மானம் தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாதந்தோறும் அளிக்க வேண்டிய 50 டிஎம்சி நீரில் 10 டிஎம்சி கூட வழங்கவில்லை.

கர்நாடகா- தமிழ்நாடு

கர்நாடகா- தமிழ்நாடு

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நீர் தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம். காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானப் பணியையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாலும் தமிழக அரசை கேட்டுத்தான் மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு

கர்நாடகா அரசு

ஆனால் கர்நாடகவோ தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது தொடர்பாக எங்களிடம் அனுமதியோ தகவலையோ சொல்லாமல் மத்திய நீர் வளத் துறை நேரடியாக அணுகி அனுமதியை பெற்றுள்ளதை ஷெகாவத்திடம் கூறினோம். நீர் வளத் துறையிடம் அனுமதி வாங்குவதால் மட்டுமே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டிவிட முடியாது என ஷெகாவத் விளக்கினார்.

மந்தமா மாந்தமா

மந்தமா மாந்தமா

மேலும் அணை கட்டுவது குறித்து தமிழக அரசின் கருத்துகளையும் கேட்போம் என உறுதி கூறினார். அது போல் மார்கண்டேய நதியின் குறுக்கிலும் கர்நாடகா அரசு அணை கட்டி வருகிறது என்றார். தமிழக அரசின் மந்த நிலையை கருதிதான் கர்நாடகா அரசு அணை கட்டுகிறதா என்ற கேள்விக்கு, எங்களுக்கு மந்தமும் இல்லை, மாந்தமும் இல்லை என துரைமுருகன் பதில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+