இனி பெட்ரோலே வேண்டாம்.. E100க்கு அனுமதி தந்த மத்திய அரசு.. பழைய கார்களில் இதை பயன்படுத்தலாமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 100 சதவீதம் வரை எத்தனால் கலந்த E100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அதிக எத்தனால் கலவையில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்றபடி சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுக்க இப்போது E20 பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. பழைய வாகனங்களை வைத்திருப்போர் தங்கள் வாகனங்களுக்கு E10 பெட்ரோலை வழங்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களையும் நடத்தியிருந்தனர். இருப்பினும், மத்திய அரசு இதில் பின்வாங்குவதாக இல்லை.

E100 Fuel e100 petrol

100 சதவீதம் எத்தனால்

இந்தச் சூழலில் தான் 100 சதவீதம் வரை எத்தனால் கலந்த E100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் மத்திய அரசு தேவையான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 85% எத்தனால், அதாவது E85 தொடர்பாக விதிமுறைகள் இருந்த சூழலில், அதில் E100 எரிபொருளும் சேர்க்கப்பட்டுள்ளது. வாகன எமிஷன், எரிபொருள் மற்றும் சோதனை நடைமுறைகளிலும் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மக்களே கவனம்

சரி இப்போது மக்களுக்கு இருக்கும் சில முக்கியமான சந்தேகங்கள் குறித்து நாம் பார்க்கலாம். கண்டிப்பாக E100 என்பது வழக்கமான E20ஐ விட விலை குறைவாகவே இருக்கும். அப்போது பழைய பெட்ரோல் கார்களில் E100 பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் வரும். ஆனால், அதை தப்பி தவறியும் பழைய காரில் போட்டுவிடக்கூடாது.

தற்போது பயன்பாட்டில் உள்ள சாதாரண பெட்ரோல் கார்களிலும், E20 பெட்ரோலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கார்களிலும் E85 அல்லது E100 எரிபொருளை பயன்படுத்த கூடாது. அதிக எத்தனாலில் இயங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கார்களில் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். உங்களிடம் இருக்கும் வாகனம் எத்தனை சதவிகித எத்தனாலை கையாள முடியுமா, அதற்கேற்ற எரிபொருளை மட்டுமே வேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

E100 என்றால் என்ன?

E100 என்பது கிட்டத்தட்ட 100 சதவீத எத்தனால் கொண்ட எரிபொருளாகும். வழக்கமான பெட்ரோலில் எத்தனால் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்படும் நிலையில், E100ல் எத்தனால் மட்டுமே இருக்கும்.

வெவ்வேறு விகிதங்களில் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் வாகனங்கள் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன. இதுவரை E85 வரை இங்கும் வாகனங்களுக்கு அனுமதி இருந்த நிலையில், இப்போது E100 வரை அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட விதிகளில் வாகனத்தின் மொத்த எடை வரம்பு 3,000 கிலோவிலிருந்து 3,500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு பிறகு இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மார்கெட்டிற்கு வரும் கார்கள்

கடந்த 2026 ஜூனில் மாருதி சுசுகி நிறுவனம் தனது Wagon R மாடலில் Flex Fuel காரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் என்ற சிறப்பையும் பெற்றது. இந்த காரில் E20 முதல் E85 வரை எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்த முடியும். அடுத்தகட்டமாக டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய சந்தைக்கான ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இப்போது E100க்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களும் விரைவில் சந்தைக்கு வரும் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது நாம் அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதே இந்த எத்தனால் கலப்பு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கச்சா எண்ணெய் இறக்குமதி நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அதை சரி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+