பரபரப்பாகும் டெல்லி.. E20 பெட்ரோலுக்கு எதிராக பிரதமர் மோடி இல்லத்தை நோக்கி கெஜ்ரிவால் இன்று பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பதற்கு ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று 100 பேருடன் அவர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்று மனு அளிக்க திட்டமிட்டுள்ளார். போலீசார் இன்னும் அனுமதி கொடுக்காததால் இன்று டெல்லியில் மீண்டும் பதற்றம் தொற்றி உள்ளது.

நம் நாட்டில் பெட்ரோலில் 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

arvind kerjriwal e20 ethanol 20

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வாகன ஓட்டிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது மைலேஜ் குறையும் என கூறி அவர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு பின்வாங்கவில்லை.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தினால் வாகனங்களில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தான் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் இந்த முடிவை கைவிட வேண்டியும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளார்.

மொத்தம் 100 பேருடன் பேரணியாக சென்று பிரதமர் மோடியிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அனுமதியை மீறி இன்று மதியம் 12 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் 100 பேருடன் டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் நோக்கி பேரணி செல்ல உள்ளார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்ய வாய்ப்புள்ளது. இதனால் காலை முதலே பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+