இரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! குலுங்கிய மணிப்பூர்.. கலங்கிய மக்கள்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
இம்பால்: மணிப்பூரில் திங்கள் கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை
வடகிழக்கு மாநிலங்களில் அண்மைக்காலமாகவே மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து ஏற்படும் இத்தகைய நிலநடுக்கங்கள் மக்களுக்கு சற்று கொடுத்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று திங்கள் கிழமை இரவு 11.11 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் குலுங்கியது. இதனால் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நின்றதையும் காண முடிந்தது. 20 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக திங்கள் கிழமை அதிகாலை வங்காள விரிகுடா கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தகைய சூழலில் தான் மணிப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது மக்களுக்கு கூடுதல் அச்சத்தை கொடுப்பதாக அமைந்து விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications