அந்தமான் கடல் பகுதியில் இரவில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
டெல்லி: அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தீவுப்பகுதியான அந்தமான்அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் பகுதியாகும். இங்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம், சில நேரங்களில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதும் உண்டு.அந்தமான் கடல் பகுதிகளில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைக்கு வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 10.46 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்தோனேசியாவின் தீவுகளிலும், அந்தமான் தீவுகளில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. 2024 புத்தாண்டு நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications