தமிழ்நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. தேர்தலில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம் அதிரடி!
டெல்லி: கடந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறிய 529 வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 33 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 10ஏ-ன் கீழ் செலவு கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யாத 529 வேட்பாளர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள 529 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது அடிப்படைத் தேர்தல் உரிமைகளை இழக்கின்றனர்.

சட்ட விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தங்களது முழுமையான தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயம். அப்படி சமர்ப்பிக்க தவறுவோரை மூன்று ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இந்தத் தகுதி நீக்கமானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரம், மாநிலத் தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு இது பொருந்தாது. இந்நிலையில் 529 வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிகபட்சமாக உ.பி.யில் 120, கர்நாடகா 59, மத்திய பிரதேசம் 39, சத்தீஸ்கர் 36, தமிழ்நாடு 33, பீகார் 28, தெலங்கானா, பஞ்சாப் 27, உத்தரகாண்ட் 27, ஆந்திரா 25, கேரளா 16 உள்ளிட்ட மாநிலங்களின் 529 வேட்பாளர்கள் தகுதி நீக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications