மோடிக்கு எதிரான விதி மீறல் புகார்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது!
பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக 6 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது.
பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் அமித் ஷா கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு தொடுத்தார்
இது அத்தனையும் தேர்தல் விதிமுறைப்படி தவறானது ஆகும். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 6 புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

என்ன உத்தரவு
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மோடி, அமித் ஷா மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த நடவடிக்கை குறித்து இன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

என்ன முடிவு
இந்த நிலையில் மோடி மற்றும் அமித் ஷா அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இவர்கள் மீது தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இதுகுறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. ஆனால் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏன் கவனம்
இதுகுறித்து காங்கிரஸ், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய நடவடிக்கையை கவனமாக விசாரிக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த விதிகளை கவனமாக ஆராய வேண்டும். அதனால் நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரியுங்கள் என்று காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications