இடம்பெயர்ந்தவர்களுக்கு ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம்- அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது.

இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை ஒழிக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ECI to hold all party meeting on remote voting Machine for Migrants

ஆகையால் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றிவிட்டு பழைய வாக்குச் சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் என்பது சில அரசியல் கட்சிகளின் கோரிக்கை. இருந்த போதும் மத்திய அரசுகளும் தேர்தல் ஆணையமும் வாக்குப் பதிவு இயந்திரத்தையே தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றன.

பொதுவாக மாநிலங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் குறிப்பாக தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று திரும்புகிற சூழ்நிலை இருந்து வருகிறது.

இதனை மாற்றும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, சொந்த ஊர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க வாக்கு பதிவு இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிகள் ஐஐடிகள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.

தற்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க ஜனவரி 16-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பும் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கின்ற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந் தேதி கூட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காட்டுவார்கள். அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களை 31.01.2023-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+