அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராகுல் நவீன் பதவிக் காலம் ஆகஸ்ட் 13-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரது பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர் 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இந்தப் பதவியில் தொடர்வார்.

மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ED Rahul Navin

அதன்படி அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 வரை அந்த பதவியில் நீடிப்பார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரி ஆவார். ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ராகுல் நவீன். 2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 2020 நவம்பரில் அமலாக்கத் துறையின் சிறப்பு இயக்குநராக பொறுப்பேற்றார்.

கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார். 2024 ஆகஸ்ட் 14 ஆம் தேதி முழுநேர அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். விதிகளின்படி, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நியமனமும், அதைத் தொடர்ந்து 3 முறை தலா ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம். அந்த அடிப்படையில், ராகுல் நவீனுக்கு தற்போது ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+